பிறந்த நாளில் உயிரை பணயம் வைத்து சாகசம் செய்த வில் ஸ்மித்!

உயிரை பணயம் வைத்து சாகசம் செய்த வில் ஸ்மித்!

பேட்பாய்ஸ், மென் இன் பிளாக், பர்சூட் ஆஃப் ஹாப்பினஸ் என பல படங்களில் நாயகனாக கலக்கிய ஹாலிவுட் ஆக்‌ஷன் ஸ்டார் வில்ஸ்மித்தின் 50வது பிறந்த தினம் நேற்று கொண்டாடப்பட்டது.

தனது பிறந்த நாள் அன்று, உயிரை பணயம் வைக்கும் சாகசத்தை செய்து அனைத்து தரப்பு ரசிகர்கள் மற்றும் பிரபலங்களையும் பிரமிக்க வைத்துள்ளார் வில் ஸ்மித்.

யுனைடட் ஸ்டேட்சின் அரிசோனாவில் உள்ள கிராண்ட் கேன்யான் எனும் உலகின் மிக ஆழமான பள்ளத்தாக்கிற்கு சென்ற வில் ஸ்மித், ஹெலிகாப்டரில் இருந்து பன்கீ ஜம்ப் செய்து சாகசம் புரிந்துள்ளார்.

குஷி படத்தில் விஜய் செய்வது போல உயரமான இடத்தில் இருந்து கயிறு கட்டி கீழே குதித்தப்பது தான் பன்கீ ஜம்ப் எனப்படுவது.

சுமார் 1,857மீட்டர் ஆழம் கொண்ட கிராண்ட் கேன்யான் பகுதியில், ஹெலிகாப்டரில் தனது குழுவுடன் சென்ற வில் ஸ்மித், அங்கிருந்து குதித்து, அந்தரத்தில் தொங்கி ஊஞ்சலாடியபடி செய்த சாகசம், பார்ப்பவர்களையே உரைய வைப்பதாய் உள்ளது.

50வயதை கடந்த போதிலும், ஸ்டண்ட் செய்வதில் ஆர்வமுடையவராய் உள்ளார் வில் ஸ்மித்.

உலகின் மிக மோசமான மற்றும் பயங்கரமான அனுபவமாக இந்த பன்கீ ஜம்ப் இருந்ததாக, சாகசத்தை முடித்த பின்னர், வில் ஸ்மித் தெரிவித்தார்.

வில் ஸ்மித்தின் சாகசத்தை நீங்களும் காணலாம்.. இதோ வீடியோ..

You'r reading பிறந்த நாளில் உயிரை பணயம் வைத்து சாகசம் செய்த வில் ஸ்மித்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மேற்குவங்கத்தில் பாஜக பந்த்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்