பங்களாதேஷ் சார்பில் ஆஸ்கர் ரேஸில் கலந்து கொள்ளும் இர்ஃபான் கான்

ஆஸ்கர் ரேஸில் கலந்து கொள்ளும் இர்ஃபான் கான்

இந்திய அரசின் சார்பில் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெறும் ஆஸ்கர் விருது விழாவின், சிறந்த வேற்று மொழி திரைப்படம் பிரிவின் கீழ், அசாம் மொழியில் வெளியான வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ் திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டது.

பாலிவுட்டின் அதிக எதிர்பார்ப்பையும் வசூலையும் குவித்த பத்மாவத், ராஸி போன்ற படங்களை ஓரங்கட்டிவிட்டு, சாமானிய மக்களின் வாழ்க்கையை சொல்லும் ‘வில்லேஜ் ராக்ஸ்டார்’ படம் தேர்வு செய்யப்பட்டது.

இந்நிலையில், தற்போது பாலிவுட் நடிகர் இர்ஃபான் கானின் படமும் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆனால், அது இந்திய படம் அல்ல.

பங்களாதேஷ் மொழியில் இர்ஃபான் கான் நடிப்பில் வெளியான ‘தூப்’ என்ற திரைப்படம் பங்களாதேஷ் நாட்டின் அதிகாரப்பூர்வ திரைப்படமாக ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

கடும் நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் இர்ஃபான் கான், இந்த செய்தி அறிந்து மிகவும் ஆச்சர்யப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

‘தூப்’ படத்தின் ஆங்கில அர்த்தம் No Bed of Roses. எளிதில் முள்படுக்கை என்ற அர்த்தம் கொள்ள வைக்கும் இந்த திரைப்படத்தை முஸ்தபா சர்வார் ஃபரூக்கி இயக்கியுள்ளார்.

‘தூப்’ படம் சிறந்த வேற்று மொழி திரைப்படமாக பரிந்துரைக்கப்பட்டு, விருது கிடைத்தாலும், அதுவும் இந்தியருக்கு பெருமை தான்!

You'r reading பங்களாதேஷ் சார்பில் ஆஸ்கர் ரேஸில் கலந்து கொள்ளும் இர்ஃபான் கான் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - வயது முதியவர்களுக்கேற்ற முளைக்கீரை சப்பாத்தி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்