நயன்தாராவை தொடர்ந்து அமலாபால் படத்திலும் பிஜிலி ரமேஷுக்கு வாய்ப்பு !

சமூக வலைதளங்கள் மூலம் தற்போது சாமானியர்களும் ஓவர் நைட்டில் பிரபலமடைந்து வருகின்றனர். யூடியூப் சேனலான பிளாக்‌ஷிப் நடத்திய பிரான்க் வீடியோவில், பேசிய ரஜினி ரசிகரான பிஜிலி ரமேஷ், ஓவர் நைட்டில் மீம்ஸ் மற்றும் டப்ஸ்மாஷ் க்ரியேட்டர்களுக்கு பெரும் தீணிப்போட்டார். இவரது வசனங்கள் டப்ஸ்மாஷ்களாக வலம் வந்து இவரை புகழின் உச்சத்திற்கு கொண்டு சென்றன.

இவரது புகழை அறிந்த நயன்தாராவின் ‘கோலமாவு கோகிலா’ படக்குழுவினர், அப்படத்தின் புரமோஷன் பாடலான ’கபிஸ்கபா’ பாடலில் பிஜிலி ரமேஷை நடனமாட வைத்தனர். அதன் பின்னர், பிஜிலி ரமேஷ் வேறு எந்த படத்திலும் கமீட் ஆகவில்லை.

இந்நிலையில், பிஜிலி ரமேஷ் அமலாபால் நடிப்பில் உருவாகி வரும் ‘ஆடை’ படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேயாத மான் படத்தை இயக்கிய இயக்குநர் ரத்னகுமார், அமலாபாலை கதையின் நாயகியாக வைத்து ஆடை படத்தை இயக்கி வருகிறார்.

அண்மையில், வெளியான ஆடை படத்தின் போஸ்டர்கள் ரசிகர்கள் மத்தியில், வைரலாக ஷேர் செய்யப்பட்டு, டாக் ஆஃப் தி டவுனாகவே மாறியது. ஏனென்றால், அந்த போஸ்டரில், அமலாபால், கிழிந்த ஆடையுடன் ரத்தம் வழிந்த கோலத்தில் காட்சியளிக்கும் அந்த புகைப்படம், படத்தின் வலியையும் ஆழத்தையும் உணர்த்தியது. இந்த படம் ஹாலிவுட் பழிவாங்கும் படமான ’ஐ ஸ்பிட் ஆன் யுவர் கிரேவ்’ என்ற படத்தின் காப்பி என்றும் விமர்சிக்கப்பட்டது.

எப்படி இருந்தாலும், பிஜிலி ரமேஷ் காட்டில் மழைதான். உமன் சென்ட்ரிக் படங்கள் நயன்தாரா மூலம் தமிழ் சினிமாவில் தொடங்கப்பட்டு, தற்போது, சமந்தா, காஜல் அகர்வால், அமலாபால் என அனைவரையும் கதையின் நாயகிகளாக மாற்றியுள்ளது வரவேற்க வேண்டிய ஒன்று!

You'r reading நயன்தாராவை தொடர்ந்து அமலாபால் படத்திலும் பிஜிலி ரமேஷுக்கு வாய்ப்பு ! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தமிழ்நாட்டு (திரு முருகன்)காந்தியின் விடுதலைக்காக அமெரிக்காவில் போராட்டம் !!!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்