சன்னிலியோன் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு வீரமாதேவி போஸ்டர்களை கிழித்த கர்நாடக அமைப்பு !

வீரமாதேவி படத்தில் நடித்து வரும் சன்னி லியோன் கர்நாடகாவில், ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடகா அமைப்பு ஒன்று அவரது வீரமாதேவி போஸ்டர்களை கிழித்தும், தீயிட்டும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

வடகறி படத்தில் ஜெய்யுடன் ஒரு பாடலுக்கு நடனமாடிய சன்னி லியோன், வி.சி. வடிவுடையான் இயக்கத்தில் உருவாகிவரும் ‘வீரமாதேவி’ படம் மூலம் முதன்முறையாக தமிழில் நாயகியாக அறிமுகமாகிறார்.

ஆபாச பட நடிகையாக வாழ்க்கையை துவங்கிய சன்னிலியோன், பாலிவுட் நடிகையாக மாறியுள்ளார். தற்போது, அவரது பயோபிக்கான கரெஞ்சித் கவுர் வெற்றிகரமான முதல் சீசனை தொடர்ந்து இரண்டாவது சீசனிலும் பாராட்டுக்களை குவித்து வருகிறது.

இந்நிலையில், பெங்களூருவில் நடன நிகழ்ச்சி ஒன்றில், சன்னிலியோன் கலந்து கொள்கிறார். முன்னர் இதற்கு தடை விதிக்கப்பட்டு பின்னர் மீண்டும் அனுமதி வழங்கப்பட்டது. சன்னி லியோன் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கியதை கண்டித்து, கர்நாடகா ரக்சனா வேதிக் அமைப்பினர் பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் வீரமாதேவி திரைப்பட போஸ்டர்களை அவர்கள் கிழித்தனர். மேலும், சிலர் சன்னிலியோன் புகைப்படங்களை தீயிட்டு எரித்தனர்.

தனது ஆபாச நடிகை பிம்பத்தை மறைக்க சன்னிலியோன் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அண்மையில், குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்தும், விநாயகர் சதுர்த்தி கும்பிட்ட புகைப்படங்களையும் பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

கர்நாடக போலீசார், சன்னிலியோன் நிகழ்ச்சிக்கு முழு பாதுகாப்பை வழங்குவதாக உறுதி அளித்துள்ளனர்.

You'r reading சன்னிலியோன் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு வீரமாதேவி போஸ்டர்களை கிழித்த கர்நாடக அமைப்பு ! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - நயன்தாராவை தொடர்ந்து அமலாபால் படத்திலும் பிஜிலி ரமேஷுக்கு வாய்ப்பு !

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்