தெலுங்கிலும் வெளியாகும் சர்கார்! டப்பிங் ஆரம்பம்

 

தமிழைத் தொடர்ந்து தெலுங்கு மொழியிலும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சர்கார் படம் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் விஜய் துப்பாக்கி மற்றும் கத்தி படங்களின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் உடன் இணைந்து சர்கார் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாக்கி உள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

அண்மையில் இப்படத்தின் இசைவெளியீட்டு விழா கோலாகலமாக நடந்தது. விழாவின் போது விஜய் படக்குழுவினர் அனைவரையும் புகழ்ந்து பேசியதோடு இன்றைய அரசியல் சூழல் குறித்து கருத்துக்களையும் பதிவு செய்தார். இதற்கு பலரும் பாராட்டுக்களும் எதிர்ப்புகளும் தெரிவித்தனர்.

இந்த நிலையில்,தமிழ் மொழியில் உருவாகியுள்ள இப்படம் தெலுங்கு மொழியிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது. இதற்கான டப்பிங் பணிகள் தற்போது தொடங்கியுள்ளது. தெலுங்கு மொழியிலும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இப்படம் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சர்கார் படத்தின் தெலுங்கு பாடல்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

You'r reading தெலுங்கிலும் வெளியாகும் சர்கார்! டப்பிங் ஆரம்பம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - புனே பேட்மிண்டன் அணிக்கு ஓனரான டாப்ஸி!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்