சூப்பர் டீலக்ஸ் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு !

தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகி வரும் சூப்பர் டீலக்ஸ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வரும் அக்டோபர் 8ஆம் தேதி ரிலீசாகிறது.

நடிகர் விஜய்சேதுபதி ஷில்பா எனும் திருநங்கை கெட்டப்பில் கலக்கவுள்ள சூப்பர் டீலக்ஸ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் அக்டோபர் 8ஆம் தேதி ரிலீசாகவுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில், மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

தேசிய விருது பெற்ற ஆரண்ய காண்டம் படத்தை இயக்கிய தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள சூப்பர் டீலக்ஸ் படத்தில், விஜய்சேதுபதி, சமந்தா மற்றும் பகத் பாசில் நடித்துள்ளனர்.

செக்கச்சிவந்த வானம், 96 என ரசிகர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தி வரும் விஜய்சேதுபதி சூப்பர் டீலக்ஸ் அறிவிப்பையும் வெளியிட்டு, தனது ரசிகர்களை சந்தோஷப்படுத்தியுள்ளார்.

You'r reading சூப்பர் டீலக்ஸ் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு ! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - திருவாரூர், திருப்பரங்குன்றத்திற்கு இடைத்தேர்தல் இல்லை ?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்