டாப்ஸியின் கேம் ஓவர் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் !

பாலிவுட்டை கலக்கி வரும் டாப்ஸி புயல் மீண்டும் கோலிவுட்டை நோக்கி நகர்ந்துள்ளது. டாப்ஸி நடிக்கும் கேம் ஓவர் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியீடு.

தமிழ் சினிமாவில் நயன்தாராவின் ‘மாயா’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அஸ்வின் சரவணன். இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று மெகா ஹிட்டானது. இதனையடுத்து அஸ்வின் சரவணன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘இறவாக்காலம்’.

இதில் ஹீரோவாக இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ளார். இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளதாம். இந்நிலையில், அஸ்வின் சரவணன் இயக்கவிருக்கும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ‘கேம் ஓவர்’ என டைட்டில் சூட்டப்பட்டுள்ள இந்த படத்தில் ஹீரோயினாக டாப்சி நடிக்கவிருக்கிறார்.

இப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என 2 மொழிகளில் தயாராகவிருக்கிறதாம். இதனை ‘Y NOT ஸ்டுடியோஸ் – ரிலையென்ஸ் எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கவுள்ளது. இப்படத்தின் பூஜை மற்றும் ஷூட்டிங் சென்னையில் இன்று (அக்டோபர் 11-ஆம் தேதி) முதல் துவங்கவுள்ளது. இதை ‘Y NOT ஸ்டுடியோஸ்’ நிறுவனமே தங்களது ட்விட்டர் பக்கத்தில் ஸ்டேட்டஸாகத் தட்டி உறுதிபடுத்தியதோடு, படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கையும் வெளியிட்டுள்ளனர்.

You'r reading டாப்ஸியின் கேம் ஓவர் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் ! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சிம்புவுடன் நடிக்கும் அளவிற்கு எனக்கு பெருந்தன்மை இல்லை – தனுஷ் ஓபன் டாக்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்