விஷாலின் அதிரடி இரும்புத்திரை டீசர் வெளியீடு

விஷால், சமந்தா, அர்ஜூன் நடித்துள்ள இரும்புத்திரை படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. இந்த டீசர் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

மித்ரன் இயக்கத்தில் விஷால், சமந்தா, அர்ஜூன் நடிப்பில் விரையில் வெளியாக உள்ள திரைப்படம் இரும்புத்திரை. இந்த திரைப்படத்தின் டீசர் சற்று முன் வெளியாகி, மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த டீசரில், டிஜிட்டல் உலகில் ஏற்படும் பிரச்னைகளும், அதனால் ஏற்படும் பயங்கர விளைவுகளும் கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு இன்பர்மேஷனுக்கும் ஒரு விலை உண்டு என்ற அர்ஜூனின் குரல், இணையதளங்களில் நடக்கும் கண்ணுக்கு தெரியாத குற்றங்களை மறைமுகமாக விளக்குகின்றது.

ஒவ்வொருத்தரோட கம்ப்யூட்டர் ஸ்கிரீனுக்கு பின்னாடியும் ஒரு இரும்புத்திரை இருக்கு என்ற வசனம் பல விஷயங்களை யூகிக்க வைக்கின்றது.
விஷால், அர்ஜூன், சமந்தா, மார்ஷியல் நிபுணர் ஜெர்மி ரோஸ்கி, டெல்லி கணேஷ், ரோபா சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவும் ரூபன் படத்தொகுப்பும் செய்துள்ளனர். இந்த படத்தை விஷால் பிலிம் பேக்டரி தயாரித்துள்ளது.

You'r reading விஷாலின் அதிரடி இரும்புத்திரை டீசர் வெளியீடு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - டிடிவி தினகரனை போல ஆயிரம் தினகரன் வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது - எடப்பாடி பழனிசாமி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்