ஷாரூக்கானை இயக்குகிறார் ஏ.ஆர். ரஹ்மான் !

Actor Shahrukhan acting in AR Rahman directing movie

இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இயக்கத்தில் நடிகர் ஷாரூக்கான் ஒரு பாடலில் நடனமாடி நடிக்கவுள்ளார்.

ஒடிஷாவில் ஆடவர் ஹாக்கி உலகக் கோப்பைப் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதற்கான டைட்டில் பாடலை, அதாவது தீம் சாங்கை உருவாக்கும் பொறுப்பு ஏ.ஆர்.ரஹ்மானிடம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான பாடல் வரிகளை குல்ஸார் எழுதியுள்ளார். இந்த பாடலுக்கு நடிகர் ஷாரூக்கான் நடனமாடி ரஹ்மான் இயக்கத்தில் நடிக்கவும் உள்ளார்.

ஜெய் ஹிந்த் இந்தியாவின் சிறப்பையும், ஹாக்கியின் பாரம்பரியத்தையும் கலந்து பாடல் வரிகளை உருவாக்கியுள்ளாராம் குல்ஸார். இதுகுறித்து ஏ.ஆர்.ரஹ்மான் குறிப்பிடுகையில், நமது விருப்பத்துக்குரிய விளையாட்டான ஹாக்கியை விட சிறந்தது வேறு எதுவும் இல்லை. உலகில் நடக்கும் மிகப் பெரிய விளையாட்டுத் தொடர்களில் மிகவும் சிறந்தது இந்த தொடர் என்பதில் சந்தேகமே தேவையில்லை. இதற்காக பெருமைப்படுகிறோம் என்றார்.

அக்டோபரில் இப்பாடல் வெளியிடப்படவுள்ளது. நவம்பர் 27ம் தேதி ஒடிஷாவின் கலிங்கா ஸ்டேடியத்தில் ஹாக்கி உலகக் கோப்பை தொடக்க விழா நடைபெறுகிறது. அப்போது இந்தப் பாடலை தனது குழுவினருடன் ஏ.ஆர்.ரஹ்மானே பாடவுள்ளார். ஒடிஷாவில் ரஹ்மான் பாடவுள்ளது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

You'r reading ஷாரூக்கானை இயக்குகிறார் ஏ.ஆர். ரஹ்மான் ! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - என்னது செக்கச்சிவந்த வானம் படத்தின் கிளைமேக்ஸ் மாறுகிறதா?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்