போட்டி இருக்கு ஆனா பொறாமை இல்லை வடசென்னையை வாழ்த்திய சிம்பு!

Simbus wish for Dhanush and Vada Chennai Film

தனுஷின் வடசென்னை படம் இன்று ரிலீசாகி இருக்கும் நிலையில், திரையில் என்றுமே போட்டி தொடரும், வடசென்னை வெற்றி பெற வாழ்த்துக்கள் என சிம்பு அறிவித்துள்ளார்.

வடசென்னை பிரஸ்மீட்டில், சிம்பு நடிக்க வேண்டிய படத்தில் தனக்கு பெருந்தன்மை இல்லாததால், அவருடன் பணிபுரிய விரும்பவில்லை, பின்னர் மீண்டும் அந்த படம் எனக்கு கிடைத்தது என தனுஷ் மனம் திறந்து பேசினார்.

இந்நிலையில், இன்று வெளியாகியுள்ள வடசென்னை படத்தை வாழ்த்தும் விதமாக சிம்பு ஒரு அறிக்கை விடுத்துள்ளார். அதில், அருமை நண்பர் தனுஷ், வெற்றிமாறன் மற்றும் வடசென்னை படக்குழுவுக்கு எனது சார்பாகவும், எனது ரசிகர்கள் சார்பாகவும் மனமார்ந்த வாழ்த்துக்கள். திரையில் நமக்கிடையே போட்டி தொடரும், சமூக வலைதளங்களில் அல்ல. ஒரு நல்ல தரமான படத்தை என்றுமே ஆதரிக்க வேண்டும் என்று எனது ரசிகர்களிடம் கேட்டுக் கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நாயகனாகவும், ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாகவும் நடித்துள்ள படம் வடசென்னை. இயக்குநர் அமீர், சமுத்திரக்கனி, ஆண்ட்ரியா, டேனியல் பாலாஜி, கிஷோர், கருணாஸ், பவான், ராதா ரவி, சுப்ரமணியன் சிவா, சீனு மோகன், டேனியல் அனி போப், பவல் நவகீதன், சாய் தீனா, சரண் சக்தி, பவர்பாண்டி விக்கி, சோமு என நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ள இந்த படம் உலகமெங்கும் இன்று ரிலீசாகி இருக்கிறது.

You'r reading போட்டி இருக்கு ஆனா பொறாமை இல்லை வடசென்னையை வாழ்த்திய சிம்பு! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அம்பயரை திட்டிய மேற்கிந்திய பயிற்சியாளருக்கு 2 போட்டிகளில் பங்கேற்க தடை

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்