செய்தியாளர் சந்திப்பில் ஆபாச உடை அணிந்தேனா? சின்மயி காட்டம்! #MeToo

Chinmayi angry for dressing sense in press meet #MeToo

மீ டூ தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் ஆபாச உடை அணிந்ததாக சர்ச்சை ஏற்பட்டதை அடுத்து சின்மயி அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.

வைரமுத்து மீது பாலியல் புகார் தெரிவித்த சின்மயி, சுசி கணேசன் மீது பாலியல் புகார் அளித்த லீலா மணிமேகலை உள்ளிட்ட பெண்களின் சார்பாக சில நாட்களுக்கு முன்னர் தென்னிந்திய திரைத்துறை பெண்கள் மையம் சார்பில் சென்னையில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அதனை இயக்குநரும், நடிகையுமான லட்சுமி ராமகிருஷ்ணன் வழிநடத்தினார்.

அப்போது சின்மயி அணிந்திருந்த ஆடை சமூக வலைதளங்களில் சர்ச்சைப் பொருளானது. சின்மயி டைட் ரெட் டிசர்ட் மற்றும் பிரா
ஸ்ட்ராப் தெரியும் படியான உடை அணிந்து வந்தார் எனவும், பாடகி என்றால் இப்படி உடை அணியக் கூடாது என்றும் நெட்டிசன்கள் டிரோல் செய்து மீம்களை அள்ளி வீசினர்.

அந்த வகையில் வெளியான மீம் ஒன்றைப் பகிர்ந்த சின்மயி, அதற்குப் பதில் அளித்திருக்கிறார். அந்த ட்வீட்டில், ''தமிழ்ச் சமூக ஆண்கள் இப்படிப்பட்ட மீம்களைப் பகிர்கின்றனர். பாடகிகள் என்றால் புடவைதான் அணிய வேண்டும். சின்மயி போன்று ஆபாசமாக அணியக் கூடாது என்று சொல்லி இருக்கின்றனர். அன்று எனக்குக் கழுத்து வலி வராமல் இருக்க அத்தகைய ஆடையை அணிந்தேன். அதுவொன்றும் உள்ளாடை கிடையாது'' என்று தெரிவித்துள்ளார்.

ஆனால், இது சமாளிப்பதற்கான ஒன்று, என்றும் நெட்டிசன்கள் தொடர்ந்து அவரை கலாய்த்து வருகின்றனர்.

 

You'r reading செய்தியாளர் சந்திப்பில் ஆபாச உடை அணிந்தேனா? சின்மயி காட்டம்! #MeToo Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தமிழக பள்ளிக் கல்வித்துறைக்கு தனி டிவி சேனல்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்