2.0 உடன் மோதவுள்ள ஜீரோ!

2.O movie vs Zero

பாலிவுட் பாட்ஷா ஷாரூக்கானின் ஜீரோ படத்தின் டிரெய்லர் வரும் நவம்பர் 2ம் தேதி ரிலீசாகிறது. நவம்பர் 3ம் தேதி ரஜினி, அக்‌ஷய் குமார் நடிப்பில் உருவாகியுள்ள பிரம்மாண்ட படமான 2.0 டிரெய்லர் ரிலீசாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஜீரோ டிரெய்லரும், 2.0 டிரெய்லரும் இந்திய அளவில் பெரும் போட்டியை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஷாரூக்கானின் பிறந்த நாள் நவம்பர் 2ம் தேதி என்பதால், ஜீரோ படக்குழுவினர் அன்றைய தினத்தில் படத்தின் டிரெய்லரை ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளனர்.

தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 6ஆம் தேதி வரவுள்ள நிலையில், அடுத்தடுத்து, இந்திய சினிமா ரசிகர்களுக்கு சரவெடி செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றது.

ஷாரூக்கான் ரசிகர்களுக்கு நவ.,2ம் தேதி முதலே தீபாவளி கொண்டாட்டம் என்றால், சூப்பர்ஸ்டார் ரசிகர்களுக்கு நவம்பர் 3முதல் தீபாவளி கொண்டாட்டம்.

ஜீரோ படத்தில் நாயகிகளாக அனுஷ்கா ஷர்மா மற்றும் கத்ரீனா கைஃப் நடித்துள்ளனர். இந்த படத்தில் ஷாரூக்கான் குள்ள மனிதராக நடித்துள்ளார். மேலும், இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலுக்கு பாலிவுட் சூப்பர்ஸ்டார் சல்மான் கான் ஷாரூக்கானுடன் இணைந்து நடனமாடியுள்ளார்.

You'r reading 2.0 உடன் மோதவுள்ள ஜீரோ! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அருண்விஜய்யின் அடுத்த பட அப்டேட் இதோ!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்