தர்மபிரபுவாக மாறிய யோகிபாபு !

Yogi babu acting as Dharma Prabhu

நயன்தாராவுடன் டூயட் பாடிய நேரம் யோகிபாபுவுக்கு ராஜ யோகம் அடித்துள்ளது. இல்லை இல்லை எமராஜ யோகமே அடித்துவிட்டது.

விமலை வைத்து கன்னிராசி படத்தை இயக்கிய இயக்குநர் முத்துகுமரன், அந்த படத்தின் ரிலீசுக்கு முன்னரே யோகிபாபுவை நாயகனாக வைத்து படம் எடுக்க ஆரம்பித்து விட்டார். தர்மபிரபு என இந்த படத்திற்கு டைட்டில் வைக்கப்பட்டு, நேற்று படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீசாகியுள்ளது.

எமலோகத்தில் எமன் பதவி முடிவடையும் நிலையில், புதிய எமனாக யோகிபாபு வாரிசு அடிப்படையில் போட்டியிடுகிறார். சித்ரகுப்தனாக பதவி வகித்து வரும் கருணாகரன், பதவி அடிப்படையில் போட்டியிடும் எமலோக காமெடி அரசியல் படமாக தர்மபிரபு உருவாகவுள்ளதாக அதன் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இப்பவே கதையை சொல்லிட்டாரு.. எத்தனை பேரு என் கதைனு வந்து நிக்கப்போறாங்களோ?

கலை இயக்குநர் பாலசந்திரன் தலைமையில் பல கோடி ரூபாய் மதிப்பில் இப்படத்திற்கான எமலோக செட் போடப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கூர்கா படத்தை தொடர்ந்து தர்மபிரபு படத்திலும் லீடு ரோலில் யோகிபாபு அசத்தவுள்ளார்.

You'r reading தர்மபிரபுவாக மாறிய யோகிபாபு ! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சீனா-பாகிஸ்தான் உறவில் ஒரு புதிய அத்தியாயம் உருவாகும்: இம்ரான் கான்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்