ஓவியாவுடன் காதல் இல்லை?

No love on Oviya Arav speech birthday party

பிக்பாஸ் முதல் சீசனில் டைட்டில் வென்றவர் ஆரவ். இவர் தற்போது, ராஜபீமா படத்தில் நடித்து வருகிறார். மேலும், ஒரு புதிய படத்திலும் கமீட் ஆகியுள்ளார். காதல் கதைகள் நிறைய வருவதாகவும், ஆனால், தான் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களை தேர்வு செய்து வருவதாக ஆரவ் தெரிவித்தார்.

சமீபத்தில், நடந்த ஆரவ் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஓவியா கலந்து கொண்டார். இது சமூக வலைதளத்தில் மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது. இருவரும் காதலித்து வருவதாகவும், பல செய்திகள் மற்றும் கிசுகிசுக்கள் கிளம்பியுள்ளன.

இதற்கு விளக்கம் அளித்த ஆரவ், எனது பிறந்தநாளுக்கு சிம்பு, பிந்துமாதவி உள்ளிட்டோரும் வந்திருந்தனர். ஓவியாவை நான் காதலிக்கவில்லை. இருவரும் நல்ல நண்பர்கள் என்றார். மேலும், நாங்கள் இணைந்து ஒரு படத்தில் நடிக்க ஆலோசனை செய்து வருகிறோம். நல்ல கதை கிடைத்தால் நிச்சயம் நடிப்போம் என வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

You'r reading ஓவியாவுடன் காதல் இல்லை? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - குடிபோதையில் 18 வாகனங்களுக்கு தீ வைத்த இளைஞரால் பரபரப்பு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்