அட, இந்த காட்சிகள் சர்கார் படத்திலிருந்து நீக்கப்பட்டதா? - அதிர்ச்சி தகவல்

Are these scenes removed from the movie Sarkar? - shocking information

இளைய தளபதி விஜய் நடித்து தீபாவளிக்கு வெளியான படம் 'சர்கார்'. இப்படம் ஆரம்பம் முதலே பல சர்ச்சைகளை சந்தித்தது. அரசியல் ரீதியாக பல எதிர்ப்புகள் தெரிவித்தனர். இந்நிலையில் சில காட்சிகள் நீக்கப்படுவதாக தற்போது தெரிவித்துள்ளனர்.

நடிகர் விஜய் நடித்த 'சர்கார்' படத்திற்கு எதிராக அதிமுக அமைச்சர்கள், பல கருத்துக்களை தெரிவித்தப்போது, இந்த படத்திற்கு அவர்கள் இலவச விளம்பரம் செய்வதாக எண்ணி படக்குழு முதலில் அந்த எதிர்ப்பை கண்டுக்கொள்ளவில்லை. ஆனால் திரையரங்குகளுக்கு முன் ஆர்ப்பாட்டம் நடத்துதல், பேனர்களை கிழித்தல், திரையரங்குகளில் அரசு அதிகாரிகள் ஆய்வு, காட்சிகள் ரத்து செய்தல் என அடுத்தடுத்து தங்களின் எதிர்ப்புகளை வெவ்வேறு வடிவங்களில் தெரிவித்ததால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனையடுத்து அதிமுக போராட்டத்திற்கு பணிந்து, சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க தயாரிப்பு தரப்பு முன் வந்துள்ளது. இந்த காட்சிகளை நீக்க விஜய் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோர்களிடம் ஆலோசனை செய்யாமல் தயாரிப்பு தரப்பே முடிவெடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சர்கார் படத்தில் கோமளவல்லி என்ன வசனம் மியூட் செய்யப்பட்டதாகவும், இலவச பொருட்களை தீயில் போடும் காட்சிகள் நீக்கப்படுவதாகவும் செய்திகள் கசிந்துள்ளது. இந்த இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டு சென்சாரின் அனுமதி பெற்று நாளை முதல் 'சர்கார்' புதுபொலிவுடன் திரையிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இனிமேலாவது அதிமுகவினர் சமாதானம் அடைந்து படத்தை திரையிட ஒத்துழைப்பார்களா? அல்லது மறுபடியும் தன் வேலையை காட்டுவார்களா? என பொறுத்திருந்து பார்ப்போம்.

You'r reading அட, இந்த காட்சிகள் சர்கார் படத்திலிருந்து நீக்கப்பட்டதா? - அதிர்ச்சி தகவல் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - உங்ககிட்ட கருப்பு தங்கம் இருக்கா? அப்படி இருந்தா 10 போதும்...

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்