வைரலாகும் ஆக்வாமேன் இறுதி டிரைலர்!

Final trailer of Aquaman

வார்னர் பிரதர்ஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள டிசி காமிக்ஸின் ஆக்வாமேன் படத்தின் இறுதி டிரைலர் வெளியாகியுள்ளது.

ஜஸ்டிஸ் லீக் படத்திலேயே ஆக்வாமேன் அறிமுகம் செய்யப்பட்டு விட்டார், அதற்கு முன் எடுக்கப்பட்ட படம் இது என்றாலும், வரும் டிசம்பர் 21ஆம் தேதி தான் உலகம் முழுவதும் ரிலீசாகிறது.

ஆக்வாமேனின் அண்டர்வாட்டர் ராஜாங்கம் டிரைலரில் கலர்ஃபுல்லாக காட்சியளிக்கின்றது. இவருக்கு பயிற்சி கொடுக்கும் ஆசானாக ஸ்பைடர் மேன் வில்லன் க்ரீன் காப்லின் கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்ற வில்லியம் டாஃபோ நடித்துள்ளார்.

ஆக்வாமேனாக ஜேசன் மோமோ நடித்துள்ளார். இவர், புகழ்பெற்ற கேம் ஆஃப் த்ரோன்ஸ் தொடரில் இருந்து ஹாலிவுட்டுக்கு வந்துள்ளார். ஆம்பர் ஹியர்டு இவரது ராணியாக நடித்துள்ளார்.

கான்ஜுரிங் பேய் படத்தை இயக்கிய ஜேம்ஸ் வான், இந்த ஃபேண்டஸி படத்தை இயக்கி இருப்பது ரசிகர்களுக்கு மேலும் ஒரு இன்ப அதிர்ச்சியான விஷயம். விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இறுதி டிரைலர் வெளியாகி டிசி ரசிகர்களிடையே வரவற்பை பெற்றுள்ளது. மார்வெல் காமிக்ஸ் ரசிகர்கள் டிரைலரை பார்த்து பொறாமையில் குறைகளையும் சொல்லி வருகின்றனர்.

You'r reading வைரலாகும் ஆக்வாமேன் இறுதி டிரைலர்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - 7 தமிழர் விடுதலை கோரி நவ.24-ல் வைகோ தலைமையில் மதிமுக போராட்டம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்