டெல்டா மக்களுக்கு நிதியுதவி புது ஐடியா சொன்ன சிம்பு!

Simbhu said new Idea for financing Delta people

கஜா புயலால் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்துள்ள டெல்டா மாவட்ட மக்களுக்கு நடிகர்கள் தற்போது நிதியுதவி அளிக்க தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில், நடிகர் சிம்பு தனக்கு தோன்றிய ஒரு புது ஐடியாவை வீடியோ மூலம் வெளியிட்டுள்ளார். அதில், “நாம் அனைவருமே மொபைல் போன் பயன்படுத்துகிறோம். மொபைல் நெட்வொர்க்குகள் ஒன்றிணைந்து தமிழகத்தில் இருக்கும் ஒவ்வொருவரிடமும் 100 ரூபாயோ அல்லது முடியாவிட்டால் 10 ரூபாயோ நிதி திரட்டி வெளிப்படைத் தன்மையுடன் அரசாங்க நிவாரண நிதியில் சேர்க்கலாம். அதனை அரசாங்கமும் வெளிப்படைத்தன்மையுடன் உரியவர்களுக்கு உதவினால், நிச்சயம் புயலால் பாதித்த மக்கள் பலனடைவர். நான் என்னால் முடிந்த உதவியை செய்வேன். எனது ரசிகர்களும் செய்து வருகின்றனர்” என அந்த வீடியோவில் சிம்பு தெரிவித்துள்ளார்.

10 கோடிக்கும் அதிக மக்கள் தொகை கொண்ட தமிழகத்தில் ஒரு கோடி பேர் மொபைல் மூலம் குறைந்த பட்சம் 100 ரூபாய் கொடுத்தாலும், 100 கோடி ரூபாய் நிவாரண நிதி டெல்ட்டா மக்களுக்கு மிகப்பெரிய பலனை கொடுக்கும். ஆனால், இதனை வெளிப்படைத்தன்மையின்றி செய்தால், மொபைல் நெட்வொர்க் நிறுவனமோ அல்லது அரசாங்க அதிகாரிகளோ கொள்ளையடிக்கவும் வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சிம்புவின் இந்த ஐடியாவை யுவன் சங்கர் ராஜா உள்ளிட்ட பிரபலங்களும், ரசிகர்களும் பாராட்டி வருகின்றனர்.

You'r reading டெல்டா மக்களுக்கு நிதியுதவி புது ஐடியா சொன்ன சிம்பு! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - 'வாட்ஸ் அப்' இந்தியாவுக்கான தலைவர் நியமனம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்