தடகள வீராங்கனையாக மாறுவேன்: நித்யாமேனன் உறுதி

Nithya menon said, I will become an athlete.

சற்று உடல் பருமனான நித்யாமேனன் தடகள வீராங்கனை கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இதற்காக கடும் பயிற்சிகளை மேற்கொள்வேன் எனக் கூறியுள்ளார்.          ஒருவர் மட்டுமே நடிக்கும் பிராணா என்ற ஹாரர் படத்தில் நித்யா மேனன் நடித்துள்ளார். மேலும், மிஷ்கினின் சைக்கோ, ஜெயலலிதாவின் பயோபிக்கான அயன் லேடி மற்றும் பாலிவுட்டில் அக்‌ஷய் குமாருடன் மிஷன் மங்கள் என வரிசை கட்டி படங்களில் நடித்து வரும் நித்யா மேனன், தற்போது மலையாளத்தில் ஷகீர் காதர் இயக்கும் ஸ்போர்ட்ஸ் படத்தில் நடிக்கவும் கமீட் ஆகியுள்ளார்.

தேசிய அளவிலான தடகள வீராங்கனையாக மாற துடிக்கும், பல தடைகளை தாண்டி போராடும் பெண்ணாக நித்யா மேனன் நடிக்கவுள்ளார்.

இதுகுறித்த பேட்டியளித்த நித்யா மேனன், இந்த உடல் எடையை வைத்துக் கொண்டு எப்படி தடகள வீராங்கனையாக நடிக்க முடியும் என பலரும் கேள்வி எழுப்பலாம். ஆனால், இயக்குநர் என் மீது நம்பிக்கை வைத்து இந்த படத்தில் என்னை ஒப்பந்தம் செய்துள்ளார்.

அவரது மன உறுதிக்காக கடுமையாக பயிற்சி செய்து தடகள வீராங்கனையாக மாறுவேன். நிச்சயம் அது மக்களுக்கு பிடிக்கும் படமாக அமையும் என தெரிவித்துள்ளார்.

You'r reading தடகள வீராங்கனையாக மாறுவேன்: நித்யாமேனன் உறுதி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - திமுகவின் ரூ10,000 கோடி எங்கே? ஸ்வாகா போட்டது யார்? அழகிரி கேள்வி- Exclusive

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்