ரஜினியின் 2.0 ஒரு தப்பான படம்-சாரு நிவேதிதா

Writer Charu Niveditha Criticizes 2.0 movie

ரஜினிகாந்த் நடிப்பில் , ஷங்கர் இயக்கியுள்ள 2.0 படத்தை கடுமையாக விமர்ச்சித்துள்ளார் எழுத்தாளர் சாரு நிவேதிதா.

தொழில்நுட்பத்தின் மிகச் சிறந்த தமிழ்படமாக 2.0 அமைந்துள்ளது என படத்தை பார்த்த பெரும்பாலானோர் பாராட்டி வருகின்றனர். இதற்கு மாறாக சாரு நிவேதிதா 2.0 ஒரு தப்பான படம் என்று கடுமையாக விமர்சித்து வருகிறார்.

இதுகுறித்த தனது முகநூலில் ஷங்கரின் படங்கள் ஆரம்பத்திலிருந்தே தப்பான கோட்பாடுகளை முன்வைக்கிறது. ரூ.5000 கோடி ஊழல் பண்ணினவன் பற்றிப் பேச்சே இருக்காது; ஆனால், அம்பது ரூபாய் லஞ்சம் வாங்கும் ட்ராபிக் போலீஸை ஷங்கரின் ஹீரோ சுட்டுப் பொசுக்குவான். இதுதான் ஷங்கரின் சமூகவியல் அறிவு.

செல்போன் டவர்களால் பறவை இனங்கள் அழிந்து மனித இனத்திற்கு கேடு விளைவிக்கிறது என்பது போன்ற போலி விஞ்ஞான கோட்பாடுகளை நாம் தொடர்ந்து கேட்டு கொண்டே தான் இருக்கிறோம். ‘ராக்கெட் விடாதீங்க... போய் விவசாயம் பாருங்க...’ என்று கூச்சல் போடும் தலைவர்களை பார்க்கிறோம் இல்லையா? அதேதான் ‘2.0’.

இதுபோன்ற கலாச்சார புரட்சிவாதிகளை சீனாவில் மா சே துங் ஆட்சியிலும், சமீபத்திய தாலிபான்கள் ஆட்சியிலும் பார்த்திருக்கிறோம். ஆனால் தாலிபன்களிடம் இருக்கும் அடிப்படை நேர்மை கூட ஷங்கரிடம் இருக்காது. அதற்கு உதாரணமாக செல்போன் டவர்களால் பறவையினங்கள் அழிந்து மனித குலத்துக்குக் கேடு என்று சொல்லும் ‘2.0’வை 600 கோடி ரூபாயில் எடுத்த லைகா நிறுவனமே செல்போன் விற்பனை செய்யும் நிறுவனம்தான். ஊருக்கு உபதேசம் செய்பவன்தான் ஊரைக் கெடுப்பதில் முதல் ஆளாக நிற்பான்.

படத்தின் ஒரு காட்சியில் ஆர்னிதாலஜிஸ்ட் பக்ஷிராஜன், பறவைகளைச் சாப்பிடுவதைக் கண்டிப்பது போல் வருகிறது. பறவையியலாளர்கள் பறவைகளைச் சாப்பிடக்கூடாது போன்ற அறிவுகெட்டத்தனமான romanticization-ஐ பறவையியலாளர் சலீம் அலி கடுமையாகக் கண்டித்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும்போது தான் ஒரு பறவை பிரியன், பறவை ஆய்வுக்கும் சைவ உணவிற்கும் சம்பந்தமில்லை என்றும் அழிந்து வரும் விலங்கினங்களை அடிக்கக் கூடாது என்பது வேறு விஷயம் என்றும் கூறுயிருக்கிறார்.

மேலும், இன்னொரு முக்கியமான பலவீனம் பறவைகள் காப்பாற்றப்பட வேண்டும் என்று கவலைப்படும் ஒருவன், எப்படி மனிதர்களைக் கொல்லும் அரக்கனாக இருக்கிறான் என்பது. காந்தியைக் கொலைகார வில்லனாகப் பார்ப்பது போல் இருக்கிறது. கதையின் அடிப்படையே கோளாறு என்பதால் எல்லாமே கோளாறு. டெக்னாலஜி விஷயங்களுக்காக சின்னப் புள்ளைங்க பார்க்கலாம்.

ஜெயமோகனுக்கு ஒரு வேண்டுகோள்... அடுத்த படத்தில் ஏதாவது வில்லனுக்கு சாரு நிவேதிதா என்று பெயர் வைத்து விடாதீர்கள்” எனத் தெரிவித்துள்ளார் சாரு நிவேதிதா.

 

You'r reading ரஜினியின் 2.0 ஒரு தப்பான படம்-சாரு நிவேதிதா Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சென்னையில் பிரபல நட்சத்திர ஓட்டலில் இருந்து கடத்தல் தங்கம், ஹவாலா பணம் பறிமுதல்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்