ஒருவழியாக ரிலீஸ் ஆன வந்தா ராஜாவாதான் வருவேன் டீஸர்!

vantha rajavaathan varuven teaser release

சிம்புவின் வந்தா ராஜாவாதான் டீஸர் யூடியூப் உள்ளிட்ட இணையதளங்களில் வெளியாகியுள்ளது.

சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு, மேகா ஆகாஷ், கேத்ரின் தெரசா, பிரபு, ரம்யா கிருஷ்ணன், நாசர், யோகிபாபு, ரோபோ ஷங்கர், மொட்டை ராஜேந்தர் என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீஸர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

ரஜினியின் 2.0 படம் ரிலீசான நவம்பர் 29ம் தேதியே பல தியேட்டர்களில் மட்டும் இந்த டீஸர் வெளியானது. ஆனால், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இந்த டீஸரை லைகா நிறுவனம் வெளியிடவில்லை.

இதனால், தியேட்டரில் டீஸரை வீடியோ எடுத்து பல பேர் அதிகாரப்பூர்வ வெளியீட்டுக்கு முன்பு வெளியிட்டு, விமர்சனமும் செய்து விட்டனர்.

இந்நிலையில், நேற்று படத்தின் டீஸர் இன்று காலை 11 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால், காலை 11 மணிக்கு டீஸர் வெளியாகவில்லை. இதனால், சிம்பு ரசிகர்கள் மிகப்பெரிய ஏமாற்றம் அடைந்தனர். பின்னர் ட்விட்டரில் தொழில் நுட்ப கோளாறு காரணமாக டீஸர் ரிலீசாவதில் தாமதம் ஏற்பட்டது. விரைவில் ரிலீசாகிவிடும் என அறிவித்து, சற்று நேரத்திற்கு முன்பு டீஸரையும் ரிலீஸ் செய்துவிட்டனர்.

தெலுங்கு படமான அத்தாரண்டிகி தாரேதி படத்தின் ரீமேக் என்பதால், என்னவோ தெரியவில்லை இந்த டீஸரில் தமிழ் நெடியை விட தெலுங்கு நெடி தூக்கலாகவே உள்ளது.

பொங்கலுக்கு பேட்ட மற்றும் விஸ்வாசம் படத்துடன் மோதும் அளவிற்கு டீஸர் ஈர்ப்புடன் இல்லை. தெலுங்கில் பிளாக்பஸ்டர் என்பதால், படத்தின் மீது எதிர்பார்ப்புகள் உள்ளன.

 

You'r reading ஒருவழியாக ரிலீஸ் ஆன வந்தா ராஜாவாதான் வருவேன் டீஸர்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - துரைமுருகனைத் தொடர்ந்து எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் - திமுகவில் அடுத்த பூகம்பம்- திருமா 'ஷாக்’! Exclusive

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்