சூப்பர்ஸ்டாரின் மரண மாஸ் போஸ்டர் ரிலீஸ்!

petta mass poster release

2.0 படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி பல அவதாரங்களில் தோன்றி ரசிகர்களுக்கு மிகப்பெரிய விஷுவல் ட்ரீட் வைத்துள்ளார். இந்நிலையில், வரும் பொங்கலுக்கு கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினியின் பேட்ட மற்றொரு ட்ரீட் கொடுக்க காத்திருக்கிறது.

பேட்ட படத்தின் பாடல்கள் டிசம்பர் 9ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், முதல் சிங்கிள் மரண மாஸ் எனும் பாடல் வரும் டிசம்பர் 3ம் தேதி வெளியாகவுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்ட சன் பிக்சர்ஸ் ரஜினியின் மாஸ் காட்டும் ஸ்டைலான புதிய போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டு, அவரது ரசிகர்களுக்கு இன்பதிர்ச்சி கொடுத்துள்ளது.

பல யூத் நடிகர்களுக்கு சவால் விடும் அளவிற்கு ரஜினியின் தோற்றம் இந்த புதிய போஸ்டரில் அல்லு கிளப்புகிறது.

இந்த நம்பர் 1 நம்பர் 2 ஆட்டம் எல்லாம் குழந்தைங்க விளையாட்டு.. எப்பவுமே நான் தான் ஒன்லி ஒன் என 2.0 படத்தில் ரஜினி சொல்வது நூற்றுக்கு நூறு உண்மையென இந்த போஸ்டரை பார்க்கும் ரசிகர்கள் பலரும் புகழ்ந்து தள்ளி வருகின்றனர். 

You'r reading சூப்பர்ஸ்டாரின் மரண மாஸ் போஸ்டர் ரிலீஸ்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - 'நான் உயிரோடு தான் இருக்கிறேன், வதந்திகளை நம்பாதீர்கள்' - நாதன் மெக்கலம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்