இப்படி உடை அணிந்தால் 5 ஆண்டுகள் தண்டனையா?

Egyptian actress Rania Youssef to go trial on wearing seethrew dress

கெய்ரோ திரைப்பட விழாவில் ஆபாச உடை அணிந்து வந்ததாக நடிகை ரானியா யூசெப் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ஹாலிவுட் நடிகைகள் உள்ளாடை கூட அணியாமல் ஆஸ்கர் போன்ற விழாக்களில் கலந்து கொள்வது சர்வ சாதாரணமாகி விட்ட நிலையில், பழமைவாதிகள் நிறைந்த எகிப்த் தலைநகரமான கெய்ரோவில் நடைபெற்ற திரைப்பட விழாவில் தொடை தெரிகிற மாதிரி உடை அணிந்து வந்த அந்நாட்டு அழகி ரானியா யூசெப் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் குற்றம் உறுதி செய்யப்பட்டால், சுமார் 5 ஆண்டுகள் வரை தண்டனை கிடைக்கும் என சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கெய்ரோ திரைப்பட விழாவில் கருப்பு நிற ஆடையில் உடல் தெரியும் படி உடை அணிந்து வந்த அந்நாட்டு நடிகை ரானியா யூசெப் மீது, அம்ரோ அப்துல் சலாம், சமிர் சப்ரி எனும் இரு வழக்கறிஞர்கள் வழக்கு தொடுத்துள்ளனர். அந்த வழக்கில் ரானியா யூசெப், ஆபாச உடை அணிந்து வந்தது பாலுணர்வை தூண்டும் வகையில் இருந்ததாக மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

மற்ற நாடுகளை விட எகிப்தில் ஆடைக் கட்டுப்பாடுகள் அதிகம் என்பதால், இதை உணராமல் தான் முதன்முறையாக அவ்வாறு உடை அணிந்து வந்தேன். இது இவ்வளவு பெரிய பிரச்சனையை உண்டாக்கும் என தான் எண்ணவில்லை. இனி எகிப்தின் பாரம்பரியத்தை கெடுக்கும் படியான உடையை அணிய மாட்டேன் என ரானியா ட்விட்டரில் மன்னிப்பும் கோரியுள்ளார்.

வழக்கின் தீர்ப்பு அவருக்கு எதிராக திரும்பும் பட்சத்தில் சுமார் 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு எகிப்திய பாடகி ஷாய்மா அகமத் பிகினி அணிந்து பாடல் வீடியோவில் நடித்ததற்காக அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டு, பின்னர், பல்வேறு கருணை மனுக்களின் அடிப்படையில் ஒரு ஆண்டாக அவரது தண்டனை குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

You'r reading இப்படி உடை அணிந்தால் 5 ஆண்டுகள் தண்டனையா? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை- சென்னை மாதவரம் சப் இன்ஸ்பெக்டர் போக்சோவில் கைது

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்