முறையாக மிருதங்கம் பயிற்சி எடுத்த ஜி.வி.பிரகாஷ்

G.V.prakash studies mridangam for his movie

சர்வம் தாளமயம் என்னும் படத்திற்காக ஓராண்டு மிருதங்கம் பயின்று படத்தில் நடித்துள்ளார் நடிகர் ஜி.வி.பிரகாஷ்.

மின்சார கனவு, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் போன்ற படங்களை இயக்கியவர் ராஜீவ் மேனன் இவர் தற்போது இயக்கியுள்ள படம் சர்வம் தாளமயம். இந்த படம் இசையை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷூக்கு ஜோடியாக அபர்ணா முரளி நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் டீசர் மற்றும் டைட்டில் டிராக் வெளியாகி ரசிகர்களுக்கிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு மிருதங்க வித்துவானாக நடிக்கும் ஜி.வி.பிரகாஷ், உமையாள்புரம் சிவராமன் என்பவரிடம் ஒரு வருடம் முறையாக மிருதங்கம் பயின்று நடித்துள்ளார்.

மேலும் இப்படத்தை பார்த்த தணிக்கைக் குழு அதிகாரிகள் படத்திற்கு யு சான்றிதழ் கொடுத்திருக்கின்றனர். சர்வம் தாளமயம் இந்த மாதம் 28ல் ரிலீசாகவுள்ளது.

You'r reading முறையாக மிருதங்கம் பயிற்சி எடுத்த ஜி.வி.பிரகாஷ் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தி.க. பொருளாளர் பிறைநுதல் செல்வி காலமானார்-ஸ்டாலின், வைகோ இரங்கல்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்