என்னது இதுதான் ஃபர்ஸ்ட் லுக்கா? ஃபேன் மேடே நல்லா இருக்கும் போல!

the IronLady first look poster release

இன்று வெளியான ஜெயலலிதாவின் தி அயன் லேடி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் போட்டோஷாப் செய்யப்பட்டதாக ரசிகர்கள் டிரால் செய்து வருகின்றனர்.

ஜெயலலிதாவின் 2ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில், ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான தி அயன் லேடி படத்தை உருவாக்கி வரும் இயக்குநர் பிரியதர்ஷினி, தனது சமூக வலைதள பக்கங்களில் இன்று, தி அயன்லேடி படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார்.

அந்த ஃபர்ஸ்ட் லுக்கில் இளமைக் கால ஜெயலலிதாவின் போட்டோவுக்குள் அப்படியே நித்யா மேனனின் முகத்தை போட்டோஷாப் செய்து அவசர அவசரமாக ஒட்டவைத்துள்ளது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது.

இதை கண்ட நெட்டிசன்கள், என்னது இதுதான் ஃபர்ஸ்ட் லுக்கா? ஃபேன் மேடே நல்லா இருக்கும் போல என கிண்டல் அடித்து வருகின்றனர்.

ஜெயலலிதாவின் சிலையை தான் சரிவர செய்யவில்லை. ஜெயலலிதாவின் பயோபிக்கை எடுக்கிறேன் என்ற பேர்வழியில், இப்படியா? ரசிகர்களை ஏமாற்றுவது எனவும் பொங்கி வருகின்றனர்.

படத்தின் அடுத்த அறிவிப்பில் தான், படம் எந்த அளவுக்கு தேறும் என்பது தெரியவரும்.

You'r reading என்னது இதுதான் ஃபர்ஸ்ட் லுக்கா? ஃபேன் மேடே நல்லா இருக்கும் போல! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சட்டமன்ற தேர்தல்: ராஜஸ்தான், தெலுங்கானாவில் இன்றுடன் ஓய்ந்தது தேர்தல் பிரசாரம் !

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்