மாரி 2 டிரைலர் இது வேற லெவல் கோலி வெர்ஷன்!

maari2 trailer in viratkholi version

மாரி 2 படத்தின் டிரைலர் வெளியாகி யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ள நிலையில், அதன் கோலி வெர்ஷன் வைரலாகியுள்ளது.

மாரி 2 படத்தின் டிரைலர் வெளியாகி யூடியூபில் இதுவரை 1 கோடியே 27 லட்சம் பேர் பார்த்துள்ளனர். மேலும், அப்படத்தில் தனுஷ் யுவன் கூட்டணியில் இடம்பெற்ற ரெளடி பேபி பாடலும் ஒரு கோடி ரசிகர்களை தாண்டியுள்ளது.

இந்நிலையில், மாரி 2 டிரைலரின் விராத் கோலி வெர்ஷன் வெளியாகி யூடியூபில் வைரலாகி வருகிறது.

இந்தியா ஆஸ்திரேலியா இடையே நடைபெற்று வரும் கிரிக்கெட் போட்டியை மையமாக வைத்து, விராத் கோலியின் சாதனைகளை மாரி 2 டிரைலர் பாணியில் அசத்தலாக எடிட் செய்துள்ளனர்.

அதிலும், அராத்து ஆனந்தியாக அனுஷ்கா சர்மா வரும் காட்சிகள் மிகவும் கச்சிதமாக ரசிகர்களை கவ்வுகிறது.

வில்லன் டொவினோ தாமஸாக ஆஸ்திரேலிய கேப்டன் வரும் காட்சிகளும், வரலட்சும் சரத்குமார் பேசும் வசனங்களில் நடிகை தீபிகா படுகோனையும், அவர் உங்க ஃபிரெண்டு தான என வரும் வசனத்தில் தெரியலையேம்மா என தோனி சொல்வது போல மிகவும் நேர்த்தியாக எடிட் செய்யப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக ஷேர் செய்யப்பட்டு வருகின்றன.

You'r reading மாரி 2 டிரைலர் இது வேற லெவல் கோலி வெர்ஷன்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஏலச் சீட்டு நடத்தி பண மோசடி: நிதி நிறுவன அதிபர் தற்கொலை

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்