தல 59 படத்துக்கு பூஜை போட்டாச்சு!

thala starts next movie

பிங்க் படத்தின் ரீமேக்கில் அஜித் நடிப்பது உறுதியாகிவிட்டது. தல59 படத்துக்கு இன்று அதிகாரப்பூர்வமாக பூஜையும் போடப்பட்டுள்ளது.

மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிப்பில், பாலிவுட்டில் அமிதாப்பச்சன், டாப்சி நடிப்பில் கோர்ட் டிராமாவாக வெளியாகி பயங்கர ஹிட் கொடுத்த பிங்க் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்கில் அஜித் நடிக்கும் தல59 படத்தின் பூஜை இன்று போடப்பட்டுள்ளது.

சதுரங்கவேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று படங்களை இயக்கிய வினோத் இப்படத்தை இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

பிங்க் படத்தின் ரீமேக்கில் அஜித் நடிக்கவுள்ளார் அதனை வினோத் இயக்கப்போகிறார் என்ற தகவல்கள் ஒரு மாதத்திற்கு முன்னரே கசிந்தாலும், அதனை வினோத் மற்றும் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யவில்லை. இந்நிலையில், சென்னையில், படத்தின் பூஜை போடப்பட்டுள்ளது.

ஆனால், இந்த பூஜையில் அஜித் பங்கேற்கவில்லை. இயக்குநர் வினோத் மற்றும் போனி கபூர் கலந்து கொண்டனர். டாப்ஸி வேடத்தில் தமிழில் யார் நடிக்கப்போகிறார் என்ற தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

விரைவில் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிங்க் படத்தில் அமிதாப் பச்சன் வழக்கறிஞர் ரோலில் அசத்தல் நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

தல அஜித் இந்த ரோலில் மேலும், சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துவார் என்பதால், தல ரசிகர்கள் இப்போதே உற்சாகத்தில் சமூக வலைதள பக்கங்களில் தல59 ஹேஷ்டேகை டிரெண்டாக்கி வருகின்றனர்.

You'r reading தல 59 படத்துக்கு பூஜை போட்டாச்சு! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - 'ஆபரேஷன் செந்தில் பாலாஜி’... அதிமுக வியூகத்தை அடித்து நொறுக்கிய அன்பில் பொய்யாமொழி மகேஷ்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்