மீண்டும் பாட்ஷா சென்டிமென்ட் ஒர்க்கவுட் ஆகுமா? மாலிக்காக மாறிய சசிகுமார்!

Petta movie Sasikumar character poster release

ரஜினியின் பேட்ட படத்தில் நடித்துள்ள சசிகுமாரின் கதாபாத்திரப் பெயர் மற்றும் கதாபாத்திர போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ரஜினியின் பேட்ட படம் வரும் பொங்கலுக்கு வருகிறது.

இந்த படத்தில் விஜய்சேதுபதி, நவாசுதின் சித்திக், சசிகுமார், பாபி சிம்ஹா, சிம்ரன், த்ரிஷா, மேகா ஆகாஷ் என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.

வில்லனாக வரும் விஜய்சேதுபதி மற்றும் நவாசுதின் சித்திக்கின் கதாபாத்திர பெயர்கள் மற்றும் போஸ்டர்களை முன்னதாக வெளியிட்ட சன் பிக்சர்ஸ், தற்போது சசிகுமாரின் கதாபாத்திரப் பெயர் மற்றும் போஸ்டரை வெளியிட்டுள்ளது.

மாலிக் எனும் இஸ்லாமியராக இப்படத்தில் சசிகுமார் நடித்துள்ளார். பாட்ஷா படத்தில் பாட்ஷா எனும் இஸ்லாமிய நண்பரை கொன்றுவிடவே மாணிக்கம், மாணிக் பாட்ஷாவாக மாறுவார். இந்த படத்திலும் ரஜினியின் நண்பராக வரும் மாலிக் கதாபாத்திரம் மிகவும் வலுவானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

You'r reading மீண்டும் பாட்ஷா சென்டிமென்ட் ஒர்க்கவுட் ஆகுமா? மாலிக்காக மாறிய சசிகுமார்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மேடையிலேயே திருநாவுக்கரசருக்கு செக்- தமிழக காங். தலைவராக பீட்டர் அல்போன்ஸை முன்மொழியும் ஸ்டாலின்?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்