எம்.ஜி.ஆர் பயோபிக்கில் நடிக்க ஆசை ஜெயம்ரவி!

jeyamravi desire to act in M.G.R biopic

எம்.ஜி.ஆர் வேடத்தில் நடிக்க தனக்கு ஆசை என ஜெயம்ரவி மனம் திறந்துள்ளார்.

ஜெயம்ரவியின் நடிப்பில் உருவாகியுள்ள அடங்கமறு படம் வரும் வெள்ளியன்று பல முன்னணி நடிகர்களின் படங்களோடு போட்டிப் போடவுள்ளது. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக இமைக்கா நொடிகள் படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக அறிமுகமான ராஷி கன்னா நடிக்கிறார்.

படத்தை புரமோட் செய்ய படத்தின் சிறு சிறு காட்சிகளை வெளியிட்டு வைரலாக்கி வருகின்றது அடங்கமறு படக்குழு. மேலும், தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த ஜெயம் ரவியிடம், இந்த பயோபிக் சீசனில், எந்த தலைவரின் பயோபிக்கில் நடிக்க உங்களுக்கு ஆசை என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, சட்டென்று எம்.ஜி.ஆராக நடிக்க ஆசை என ஜெயம் ரவி தெரிவித்தார்.

ஜெயம் ரவி அழகாக இருப்பதால், தாரளமாக எம்.ஜி.ஆராக நடிக்கலாம் என அவரது ரசிகர்களும் கமெண்ட் செய்து வருகின்றனர். ஜெயம் ரவி அடுத்ததாக அவருடைய அண்ணன் மோகன் ராஜா இயக்கத்தில் தனி ஒருவன் 2ம் பாகத்தில் நடிக்கவுள்ளார். ஜெயலலிதாவின் பயோபிக் ரெடியாவது போல எம்.ஜி.ஆர் பயோபிக்கும் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ஏற்கனவே சீரியல் நடிகர் ஒருவர் குறைவான பட்ஜெட்டில் எம்.ஜி.ஆர் பயோபிக்கில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

You'r reading எம்.ஜி.ஆர் பயோபிக்கில் நடிக்க ஆசை ஜெயம்ரவி! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அக்ஷய் குமார், ஜான் ஆபிரஹாமுடன் மோதும் பிரபாஸ்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்