ஜீவா படத்தில் நல்லக்கண்ணு நடிக்கிறாரா? புகைப்படம் வெளியானதால் பரபரப்பு

Nallakannu in jeevas newmovie

ராஜு முருகன் இயக்கத்தில் ஜீவா நடிக்கும் ஜிப்சி படத்தின் புரொமோஷன் பாடல் ஒன்றில் சமூக ஆர்வலர்கள் சிலர் நடித்துள்ளனர்.

கீ, கொரில்லா படங்களை தொடர்ந்து இயக்குநர் ராஜு முருகன் இயக்கத்தில் ஜீவா நடித்துவரும் படம் ஜிப்ஸி. இந்த படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடாஷா நடிக்கிறார்.

இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் சென்னையில் நடைபெற்று வருகின்றன. இப்படத்தை புரொமோட் செய்யும் விதமாக சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள ஒரு புரட்சி பாடலுக்கு சமூக ஆர்வலர்கள் சிலர் நடித்துள்ளனர்.

அந்த படப்பிடிப்பு தளத்தில் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நல்லக்கண்ணு இருக்கும் புகைப்படம் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது. அரசியல் வட்டாரத்தில் அய்யா நல்லக்கண்ணுவுக்கு நல்ல பெயர் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் சர்கார் படத்தில் பழ. கருப்பையா நடித்திருந்த நிலையில், இவரும் நடிக்க வந்துவிட்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

You'r reading ஜீவா படத்தில் நல்லக்கண்ணு நடிக்கிறாரா? புகைப்படம் வெளியானதால் பரபரப்பு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - 2.0 படத்தின் கிளைமேக்ஸ் பாடலை ரிலீஸ் செய்த லைகா நிறுவனம்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்