பேட்ட படத்திற்கு யு/ஏ சான்றிதழ்!

pettamovie got U/A certificate

பொங்கலுக்கு களம் இறங்கும் ரஜினியின் பேட்ட படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் கொடுத்துள்ளது.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி, விஜய்சேதுபதி, பாபி சிம்ஹா, சசிகுமார், நாவாசுதின் சித்திக், நடிகைகள் சிம்ரன், திரிஷா, மேகா ஆகாஷ், சனந்த ரெட்டி என ஒரு நடிகர் பட்டாளமே நடித்து பொங்கலுக்கு வெளிவரயிருக்கும் படம் பேட்ட.

நாட்டையே அச்சுருத்தும் ஆணவ கொலைகளை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த படத்திற்கு இளம் இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள இந்த படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் கொடுத்துள்ளது. படத்தின் டிரைலர் புத்தாண்டு தினத்தன்று வெளியாகும் என கூறப்படுகிறது.

You'r reading பேட்ட படத்திற்கு யு/ஏ சான்றிதழ்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - திருகோணமலையில் அமெரிக்கா ராணுவ முகாம்- இந்தியாவுக்கு பெரும் பின்னடைவு!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்