விக்ரம் மகனுடன் போட்டி போடும் ஜி.வி. பிரகாஷ்?

GVPrakash newmovie release

காதலர் தினத்துக்கு ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் உருவாகி வரும் 100% காதல் திரைப்படம் ரிலீசாகிறது. தற்போது, அந்த படத்திற்கு யு சான்றிதழ் வழங்கப்பட்டது.

நாகசைதன்யா, தமன்னா நடிப்பில் தெலுங்கில் வெளிவந்த படம் 100% லவ். இந்த படத்தின் தமிழ் ரீமேக்காக 100 சதவீதம் காதல் படம் உருவாகியுள்ளது. இதில், கதாநாயகனாக ஜி.வி.பிரகாஷும், அவருக்கு ஜோடியாக ஷாலினி பாண்டேவும் நடித்துள்ளனர்.

சந்திரமவுலி இந்த படத்தை இயக்கியுள்ளார். தம்பி ராமய்யா, நாசர், தலைவாசல் விஜய் ஆகியோர் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

படப்பிடிப்பு முடிந்த நிலையில் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடைப்பெற்று வருகிறது. மேலும் தணிக்கை குழு இந்த படத்திற்கு யு சான்றிதழ் கொடுத்துள்ளது. படம் 2019ஆம் ஆண்டு காதலர் தினத்தன்று வெளியாகவுள்ளது.

கல்லுரியில் மாணவன் மாணவிக்கு இடையே உள்ள போட்டியை காதலும், நகைச்சுவையும் கலந்து படத்தை உருவாக்கியிருக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கும் இந்த படத்தை கணேஷ்.ஆர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

மேலும், அடுத்த ஆண்டு காதலர் தினத்தில் தான் பாலா இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள வர்மா படம் ரிலீசாகிறது.

இதனால், ஜி.வி. பிரகாஷ் மற்றும் துருவ் விக்ரமின் மோதல் உறுதியாகியுள்ளது. அர்ஜுன் ரெட்டி படத்தில் நடித்த ஷாலினி பாண்டே 100% காதல் படத்தில் நடித்துள்ளதால், அவரும் அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக்கான வர்மாவுக்கு எதிராக களம் இறங்குகிறார்.

You'r reading விக்ரம் மகனுடன் போட்டி போடும் ஜி.வி. பிரகாஷ்? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ரஜினியின் ஆன்மீக அரசியலுக்கு ஓராண்டாக நீடிக்கும் ‘லீவு’

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்