பொங்கலுக்கு ரிலீசாகும் காஞ்சனா 3 ஃபர்ஸ்ட்லுக்!

kaanchana3 FirstLook pongal release

முனி 4 அல்லது காஞ்சனா 3 என்ற பெயரில் உருவாகி வரும் லாரன்ஸ் திரைப்படம் பொங்கலுக்கு பேட்ட படத்துடன் அதன் ஃபர்ஸ்ட் லுக் டீஸரை வெளியிடுகிறது.

முனி படம் மூலம் காமெடி கலந்த பேய் பட ஜானரை ராகவா லாரன்ஸ் துவக்கி, அதிரடி வெற்றியும் பெற்றார். அவர் போட்டுக் கொடுத்த பாதையில் பல தமிழ் காமெடி பேய் சினிமாக்கள் அதன் பின்னர் வெளியாகின. காஞ்சனா முதல் மற்றும் இரண்டாம் பாகம் பேய் ஹிட் அடித்தது.

இந்நிலையில், காஞ்சனா 3ம் பாகம் திரைப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 18ம் தேதி கோடை கொண்டாட்டமாக ரிலீசாகிறது.

இந்நிலையில், இறுதிகட்ட படப்பிடிப்பில் இருக்கும் காஞ்சனா 3 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸர் ரஜினியின் பேட்ட படத்துடன் பொங்கல் விருந்தாக வருகிறது.

இந்த படத்தில் பிக்பாஸ் ஓவியா மற்றும் வேதிகா நாயகிகளாக நடித்துள்ளனர்.

You'r reading பொங்கலுக்கு ரிலீசாகும் காஞ்சனா 3 ஃபர்ஸ்ட்லுக்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - லோக்சபா தேர்தல்: கட்சி நிர்வாகிகளுடன் ஸ்டாலின் ஆலோசனை!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்