தி ஆக்ஸிடென்டல் பிரைம் மினிஸ்டர் டிரைலர் வெளியீடு - மன்மோகன்சிங் கதாபாத்திரத்தில் அசத்தும் அனுபம் கெர்!

The Accidental Prime Minister movie Trailer Release

மன்மோகன் சிங்கின் பிரதமர் பதவிக் காலத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள 'திஆக்ஸிடென்டல் பிரைம் மினிஸ்டர்' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

மன்மோகன் சிங் வேடத்தில் நடித்துள்ள இந்தி நடிகர் அனுபம் கெர், நடை, உடை, பாவனைகளில் அச்சு அசலாக மன்மோகன் போன்றே மெனக்கெட்டு தத்ரூபமாக நடித்துள்ளது படம் பெரும் வரவேற்பைப் பெறும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2004 முதல் 2014 வரை மன்மோகன் சிங் பிரதமராக இருந்த காலத்தில் அவருடைய பத்திரிகை ஆலோசகராக இருந்தவர் சஞ்சய் பாரு. இவர் மன்மோகன் சிங்குடன் பணியாற்றிய அனுபவங்களையும், அக்காலகட்டத்தில் நிகழ்ந்த பல்வேறு நிகழ்வுகளையும் தொகுத்து கடந்த 2014 -ம் ஆண்டில் 'மன்மோகன்ஸ் மெமரீஸ்' என்ற புத்தகம் வெளியிட்டார்.

இந்த புத்தகத்தை அப்படியே அடிப்படையாகக் கொண்டு தி 'ஆக்ஸிடென்டல் பிரைம் மினிஸ்டர்' என்ற பெயரில் திரைப்படமாக்கப்பட்டுள்ளது. புதுமுக இயக்குநர் விஜய் ரத்னாகர் இயக்கத்தில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் இந்தி நடிகர் அனுபம் கெர் மன்மோகன் சிங் வேடத்தில் நடித்துள்ளார். நடை, உடை, பாவனைகளில் மன்மோகன் சிங்காகவே மிக மெனக்கெட்டு நடித்து அசத்தியுள்ளார். சஞ்சய் பாரு வேடத்தில் நடிகர் அக்சய் கன்னா படம் முழுக்க வருகிறார். சோனியா காந்தி வேடத்தில் ஜெர்மனியைச் சேர்ந்த சூசன் பெர்னர்ட், ராகுல் காந்தியாக அர்ஜூன் மாத்தூர், பிரியங்காவாக ஆகானா குமாரா நடித்துள்ளனர்.

மன்மோகன் சிங் பிரதமராக இருந்த காலத்தில் நிகழ்ந்த பல்வேறு அரசியல் திருப்பங்கள், நிகழ்வுகள் பலவும் இத்திரைப்படத்தில் தத்ரூபமாக இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ஜனவரி 11-ந் தேதி இப்படம் திரைக்கு வர உள்ளது. லோக்சபா தேர்தல் நெருங்கும் வேளையில் படம் வெளியாவதால் அரசியல் கட்சிகளிடையேயும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது 'தி ஆக்ஸிடென்டல் பிரைம் மினிஸ்டர்'.

You'r reading தி ஆக்ஸிடென்டல் பிரைம் மினிஸ்டர் டிரைலர் வெளியீடு - மன்மோகன்சிங் கதாபாத்திரத்தில் அசத்தும் அனுபம் கெர்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கர்ப்பிணிக்கு செலுத்தப்பட்ட ஹெச்.ஐ.வி ரத்தம்! கைதாகும் விஜயபாஸ்கர்?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்