இந்தியா ஆஸ்திரேலியா 3வது டெஸ்ட்... பார்வையாளர்களுக்கு முகக்கவசம் கட்டாயம்!

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ள போட்டியில் பார்வையாளர்கள் அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 4 டெஸ்ட் கொண்ட தொடரில், அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்ட்டில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதற்கு பதிலடி கொடும் விதமாக மெல்போர்னில் நடந்த 2வது டெஸ்ட்டில் இந்தியா அதே 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 1-1 என தொடர் சமனில் இருக்க 3வது டெஸ்ட் சிட்னியில் நாளை தொடங்குகிறது.

இதற்கிடையே, மெல்போர்னில் நடைபெற்ற இரண்டாவது மற்றும் பாக்சிங் டே டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தின் போது பார்வையாளராக பங்கேற்ற ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, பார்வையாளர்கள் நலன் கருதி சிட்னி மைதானத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக நாளை சிட்னி மைதானத்திலும் நடைபெறவுள்ள 3 -வது டெஸ்ட்யினை காணவரும் அனைவரும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக 48,000 பார்வையாளர்கள் அமரும் வசதி கொண்ட சிட்னி மைதானம் தற்போது 10,000 பேர் மட்டும் அமரும் வகையில் குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

You'r reading இந்தியா ஆஸ்திரேலியா 3வது டெஸ்ட்... பார்வையாளர்களுக்கு முகக்கவசம் கட்டாயம்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - உருமாறிய கொரோனா வைரஸ் பரவல் இங்கிலாந்தில் இந்திய தூதரகம் மூடல்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்