ஆரம்பமானது ஐபிஎல்2021! ரெய்னா ரெடி! ஓரங்கட்டப்பட்ட மலிங்கா, ஜேசன் ராய், டாம் பேண்டன் மற்றும் பலர்!

இந்த ஆண்டிற்கான ஐபிஎல் திருவிழா இன்னும் சில மாதங்களில் தொடங்கப்பட்டுள்ள நிலையில், அணி நிர்வாகம் தேவையான வீரர்களை தக்கவைத்து கொள்ளவும், மற்ற வீரர்களை விடுவிக்கவும் இன்றுடன் கால கெடு வைத்திருந்தது. மேலும் வரும் பிப்ரவரி மாதம் ஏலம் தொடங்கவிருப்பதால், அனைத்து அணி நிர்வாகமும் வீரர்கள் தேர்வில் மும்முரமாக இறங்கியுள்ளன. அதுமட்டுமின்றி பிசிசிஐ ஆணையத்திடம் இருந்து, அனைத்து வீரரகள் மற்றும் அணி நிர்வாகத்தினறுக்கும் மின்னஞ்சல் ஒன்று அனுப்பப்பட்டு உள்ளது. அதன்படி கடந்த ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட தொகையே இந்த ஆண்டும் தொடரும் என்று. இதனால் பல வீரர்கள் சந்தோஷத்திலும், சிலர் மன குமுறலிலும் உள்ளனர்.

சென்னை அணி

சென்னை அணியை பொறுத்தவரை கடந்த சீசன் அவர்களுக்கு, அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. எனவே எதிர்வரும் சீசனில் அவர்களின் பழைய அணியை மீட்டெடுக்க போராடுவார்கள். ஏற்கனவே ஷேன் வாட்சன் ஓய்வு அறிவித்த நிலையில், அவர் அணியில் இருந்தீ ஓரங்கட்டப்பட்டார். மேலும் அவருடன் முரளி விஜய், கேதார் ஜாதவ், சாவ்லா, ஹர்பஜன் சிங், மோனுகுமார் சிங் மற்றும் வாட்சன் உட்பட ஆறு வீரர்கள் வெளியேற்றப்பட்டனர்.

சன்ரைசஸ் ஹைதராபாத்

சன்ரைசஸ் ஹைதராபாத் அணியில் இருந்து பெரிய மாற்றம் ஏதும் இல்லாமல் வார்னர் தலைமையில் களமிறங்க தயாராகி வருகிறது. இந்த அணியில் இருந்து பில்லி ஸ்டேன்லேக், ஃபேயன் ஆலன், சஞ்சய் யாதவ், சந்தீப் மற்றும் ப்ரித்வி ராஜ் ஆகிய ஐவர் வெளியேற்றப்பட்டனர்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் இருந்து மட்டும் 10 வீரர்கள் வெளியேற்றப்பட்டனர். அவர்களில் பின்ச், கிரிஸ் மோரிஸ், சிவன் துபே, மொயின் அலி, இசுரு உடானா, உமேஷ் யாதவ் போன்றோரும் ஆவர்.

ராஜஸ்தான் ராயல்ஸ்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இதுவரை எந்த வீரரும் வெளியேற்றப்படவில்லை. ஆனால் கேப்டன் பொறுப்பானது சுமித் இடமிருந்து, இளம் அதிரடி வீரரான சஞ்சு சாம்சனுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அணியின் அணி இயக்குனராக மகிளா ஜெயவர்த்தனே அல்லது குமார சங்ககரா ஆகிய இருவரில் ஒருவர் நியமிக்கப்பட வாய்ப்புள்ளது.

கொல்கத்தா நைட்ரைடர்ஸ்

கொல்கத்தா அணியில் இருந்து டாம் பேண்டன், கிரிஸ் கிரீன் உட்பட நிகில் நாயக், சித்தேஷ் லெட், சித்தார்த் மற்றும் ஹரி குர்னியோடு ஆறு வீரர்கள் வெளியேற்றப்பட்டனர்.

மும்பை இந்தியன்ஸ்

மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து, அவர்களின் ஆஸ்தான பந்து வீச்சாளரான மலிங்கா வெளியேற்றப்பட்டார். மலிங்கா, நாதன் கோல்டர் நைல், ஜேம்ஸ் பேட்டின்சன் மற்றும் ஷெர்பான் ரூதர்போர்டு உட்பட ஏழு வீரர்கள் வெளியேற்றப்பட்டனர்.

டெல்லி கேப்பிட்டல்ஸ்

கடந்த சீசனில் இறுதி போட்டிக்கு முன்னேறிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இருந்து அலெக்ஸ் கேரி, ஜேசன் ராய், கீமோ பால், சந்தீப் லாமிசேன், மொகித் சர்மா மற்றும் தேஷ்பாண்டே ஆகிய ஆறு வீரர்கள் வெளியேற்றப்பட்டனர்.

You'r reading ஆரம்பமானது ஐபிஎல்2021! ரெய்னா ரெடி! ஓரங்கட்டப்பட்ட மலிங்கா, ஜேசன் ராய், டாம் பேண்டன் மற்றும் பலர்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கண்ணின் கருவளையத்தை போக்கும்... சரும அழகை பராமரிக்கும் அலோவேரா என்னும் கற்றாழை ஜெல்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்