இங்கிலாந்து டெஸ்ட்... இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா இல்லை!

சென்னையில் தங்கியுள்ள இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு நடத்தப்பட்ட முதல் கட்ட பரிசோதனையில் அனைவருக்கும் கொரோனா இல்லை என்று தெரியவந்துள்ளது. அடுத்த மாதம் இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொள்ள இங்கிலாந்து அணி, இந்திய கிரிக்கெட் அணியுடன் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. மேலும், அதற்கு பின்னர், டி20 மற்றும் ஒருநாள் தொடர்களிலும் விளையாடவுள்ளது.

இந்தியா-இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் பிப்ரவரி 5-ம் தேதி முதல் 9-ம் தேதி வரையும், 2-வது போட்டி சொன்னையில் பிப்ரவரி 13-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை நடைபெறுகிறது. 3-வது மற்றும் 4-வது டெஸ்ட் போட்டிகள் அகமதாபாத்தில் நடக்கிறது.

இதற்கிடையே, டெஸ்ட்டி போட்டியில் பங்கேற்பதற்காக இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் வீர்ரகள் ஏற்கெனவே சென்னை வந்துவிட்டனர். அனைத்து வீரர்களும் கொரோனா தடுப்பு விதிமுறையின் கீழ் 6 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதனிடையே, கிரிக்கெட் வீரர்களுக்கு 3 முறை கொரோனா பரிசோதனை செய்யப்படும். இதில், முதல் முறை மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இந்திய வீரர்களுக்கு கொரோனா இல்லை என்று தெரியவந்துள்ளது. வீரர்களுக்கான அனைத்து பரிசோதனைகளும் முடிக்கப்பட்டு பிப்ரவரி 2- ம் தேதி முதல் பயிற்சியில் ஈடுபடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

You'r reading இங்கிலாந்து டெஸ்ட்... இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா இல்லை! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - வயர்லெஸ் சார்ஜர்: காற்றிலேயே சார்ஜ் செய்யலாம்: டிஜிட்டல் உலகில் அடுத்த புரட்சி!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்