ஒவ்வொரு தொடரும் முக்கியமானது: ஆனால்?!... ரவி சாஸ்திரி பேட்டி

இந்திய கிரிக்கெட் வீரர்களும் மனிதர்கள்தான் அவர்களுக்கும் ஓய்வு வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, இந்திய கிரிக்கெட் அணியுடன் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இன்று சென்னையில் சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கிய நடைபெற்று வருகிறது. 2-வது போட்டியும் சென்னையில்தான் நடக்கிறது. 3 மற்றும் 4-வது போட்டி அகமதாபாத்தில் நடக்கிறது. அதற்கு பின்னர், டி20 போட்டிகள் அகமதாபாத்திலும், ஒருநாள் தொடர்கள் புனேவிலும் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, கொரோனா பாதுகாப்பு வளையத்தில் இருக்கும் நாட்கள் கிர்க்கெட் வீரர்களை மனதளவில் பாதிக்கும். கிரிக்கெட் போட்டிகளில் இருந்து வீரர்களுக்கு சிறிய இடைவெளியாக ஓய்வுக்காலம் கட்டாயம் தேவை என்பதை நான் திடமாக நம்புகிறேன்.

தற்போது, இங்கிலாந்துடன் விளையாடி வருகின்றனர். இதற்குப்பின் ஐபிஎல் தொடரில் விளையாடவுள்ளனர். அப்போது ஐபிஎல் முடிந்த பின்பு வீரர்களுக்கு குறைந்தது 2 வாரம் ஓய்வுக்காலம் அவசியம் தேவை. என்னெ்றால், நாம் அனவைரும் மனிதர்கள்தான், கிரிக்கெட் வீரர்களும் அப்படிதான் என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

ஒவ்வொரு கிரிக்கெட் தொடரும் முக்கியமானது. அதேபோல கிரிக்கெட்டின் ஒவ்வொரு பார்மெட்டும் முக்கியமானது. அணி ஒட்டுமொத்தமாக சிறப்பாக விளையாடும்போது கிடைக்கும் பெருமை எல்லாம் அனைவருக்கும் மகிழ்ச்சியை தரும். குறிப்பாக, இந்திய கிரிக்கெட் அணியை பொறுத்தவரை நல்ல வீரர்கள் ஏராளமாக உள்ளனர். ஒவ்வொரு வீரரும் ஒவ்வொரு பார்மெட்டுக்கும் ஏற்ப இருக்கிறார்கள். வீரர்கள் எல்லாம் வாய்ப்புக்காக பசியோடு காத்திருக்கிறார்கள் என்றும் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

You'r reading ஒவ்வொரு தொடரும் முக்கியமானது: ஆனால்?!... ரவி சாஸ்திரி பேட்டி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கவுதம் மேனனுடன் இணைந்த 3 இயக்குனர்கள்.. குட்டி ஸ்டோரி பட அனுபவம் பகிர்ந்தனர்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்