வேலை வாங்கி தருவதாக கூறி லஞ்சம் வாங்கிய தலைமை செயலக ஊழியர்: போலீசார் வழக்கு பதிவு

Chief Secretariat Officer who bribed the employer to buy a job

மின் வாரியத்தில், உதவி இன்ஜினியராக வேலை வாங்கித் தருவதாக 13 லட்சம் ரூபாய் வாங்கிய, தலைமை செயலக ஊழியர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சென்னை சேலையூரை சேர்ந்தவர் சந்திரசேகரன். தலைமை செயலகத்தில், அலுவலக உதவியாளர் என்ற நிலையில் பணியாற்றி வருகிறார். 2013ல் சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் தபேதராக சந்திரசேகரன் வேலை பார்த்துள்ளார்.அப்போது, சேலத்தை சேர்ந்த, ஜெயபிரகாஷ் என்பவருக்கு மின்வாரியத்தில், உதவி இன்ஜினியராக வேலை வாங்கி தருவதாக, 13 லட்சம் ரூபாய் வாங்கி மோசடி செய்துள்ளார்.

இந்த தொகையில், ஐந்து லட்சம் ரூபாயை அவர், திரும்ப தந்துவிட்டதாக கூறப்பட்டது. மீதமுள்ள தொகைக்கு, காசோலை கொடுத்துள்ளார். அது, பணம் இல்லாமல் திரும்ப வந்து விட்டது,இதுகுறித்து, சேலையூர் போலீசில், ஜெயபிரகாஷ் புகார் அளித்துள்ளார். இந்த தகவல், லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து, நேற்று முன்தினம், சந்திரசேகரன் மீது, லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர். அவர், தற்போது, வேளாண் துறையில், அலுவலக உதவியாளராக பணியாற்றி வருகிறார்.

குழப்பம், தசை வலி, அசதியா? - அலட்சியம் பண்ணாதீர்கள்

You'r reading வேலை வாங்கி தருவதாக கூறி லஞ்சம் வாங்கிய தலைமை செயலக ஊழியர்: போலீசார் வழக்கு பதிவு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான போராட்டம் நடத்திய ஊழியர்களை பழிவாங்கும் கூகுள்?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்