ராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் திடீர் திருப்பம்: சி.பி.சி.ஐ.டி.க்கு கை மாறிய வழக்கு!

rasipuram child case transfer to c.b.c.i.d

தமிழகத்தையே உலுக்கிய ராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் குழந்தைகள் விற்பனை விவகாரத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் தினந்தோறும் வந்து கொண்டிருக்கிறது. குழந்தைகள் விற்பனையில் ஈடுபட்டதாக ஓய்வு பெற்ற செவிலி அமுதா, அவரது கணவர் ரவிச்சந்திரன், அரசு ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன் மற்றும் தரகர்களாக செயல்பட்டவர்கள் என இதுவரை ஏழு பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், இந்த வழக்கை ராசிபுரம் காவல் நிலையத்தில் இருந்து சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கை தீவிரமாக விசாரிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கையை டிஜிபி எடுத்துள்ளார்.

இலங்கையில் தீவிரவாதிகள் பதுங்கியிருந்த வீட்டில் 15 சடலங்கள்; வெடிமருந்து குவியலும் கண்டுபிடிப்பு

You'r reading ராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் திடீர் திருப்பம்: சி.பி.சி.ஐ.டி.க்கு கை மாறிய வழக்கு! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - போதை மருந்து உட்கொண்டது உறுதியானது... இங்கிலாந்து ஓப்பனிங் பேட்ஸ்மேன் அதிரடி நீக்கம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்