இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம்.. சுகேஷ் சந்திராவுக்கு ஜாமீன்..

Complaint of attempted bribery to obtain double leaf emblem. Bail for Sukesh Chandra

இரட்டை இலைச் சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டிடிவி தினகரன், பெங்களூருவை சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் கடந்த ஏப்ரல் 16-ஆம் தில்லி காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.அரசு ஊழியருக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் டிடிவி தினகரன் ஜாமினில் வெளியே வந்தார்.

இதுதொடர்பான வழக்கு தில்லி மாவட்ட தீஸ் ஹசாரி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் சுகேஷ் சந்திரசேகர், டிடிவி தினகரன் உள்ளிட்ட 9 பேர் மீது டெல்லி குற்றப்பிரிவு காவல்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது.இந்த வழக்கில் ஜாமீன் கோரி பல முறை தரகர் சுகேஷ் சந்திரசேகர் மனு தாக்கல் செய்தார். அதை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. 2017 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திரா, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சுகேஷ் சந்திரசேகருக்கு இன்று உச்சநீதிமன்றம் 2 வார கால இடைக்கால ஜாமீன் வழங்கி யுள்ளது.

You'r reading இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம்.. சுகேஷ் சந்திராவுக்கு ஜாமீன்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சொத்து வரியை உரிய காலத்திற்குள் செலுத்தினால் 5% ஊக்கத்தொகை ! தவறினால் 2% அபராதம் !

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்