காஷ்மீரில் போலீஸ் அதிகாரியைக் கொன்று உடலைச் சாக்கடையில் வீசிய கும்பல்

காஷ்மீரில் போலீஸ் அதிகாரியைக் கொன்று உடலைச் சாக்கடையில் வீசிய கும்பல்

ஜம்முவில் துணை போலீஸ் சூப்பிரண்டு ஒருவரை அடித்துக் கொன்ற மர்மக்கும்பல் அவரது உடலை சாக்கடையில் வீசிச் சென்றுள்ளது.

ஸ்ரீநர் துணை போலீஸ் சூப்பிரண்டாக இருப்பவர் முகமது ஆயூர் பண்டிட். கடந்த வியாழக்கிழமை இரவு ஸ்ரீநகர் ஜும்மா மசூதி அருகே பணியில் இருந்துமுள்ளார். அப்போது, மசூதிக்கு வருபவர்களை இவர் புகைப்படம் எடுத்துள்ளார். 'எதற்காக புகைப்படம் எடுக்கீறீர்கள்' என்றுக் கேட்டு ஒரு கும்பல் அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், அந்தக் கும்பல் அவரைக் கற்கலால் தாக்கியது. இரும்புக்கம்பி கொண்டும் அடித்துள்ளனர்.  இதில் சம்பவ இடத்திலேயே அவர் இறந்து போனார்.

ஆத்திரம் தீராத அந்தக்கும்பல் அவரது உடலை அருகில் உள்ள சாக்கடையில் போட்டு விட்டு சென்று விட்டது. வெள்ளிக்கிழமைக் காலை சாக்கடையில் கிடந்த அவரது உடலை, மகன் அடையாளம் காட்டினார். இந்த சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். காஷ்மீர் முதல்வர் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்

You'r reading காஷ்மீரில் போலீஸ் அதிகாரியைக் கொன்று உடலைச் சாக்கடையில் வீசிய கும்பல் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மக்களிடையே நம்பிக்கையை இழக்கும் பதஞ்சலி தயாரிப்புகள்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்