கோவில்பட்டி காவல் நிலையத்தில் வாலிபர் சித்திரவதை: டி.எஸ்.பி உள்பட 9 பேர் மீது வழக்கு

கோவில்பட்டி காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட வாலிபர் சித்திரவதை செய்யப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் டிஎஸ்பி உள்பட 9 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காந்தி நகரைச் சேர்ந்த செல்லத்துரை என்பவரை கடந்த 2018 ஏப்ரல் 17 ஆம் தேதி வழக்கு ஒன்றின் விசாரணைக்காக கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் அழைத்துச் சென்றனர். விசாரணையின் போது போலீசார் தன்னை அடித்து சித்திரவதை செய்ததாக செல்லத்துரை கோவில்பட்டி ஜெ.எம்.2 நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் உதவி ஆய்வாளர்கள் ராஜ பிரபு, ஆண்டனி திலிப், மணிமாறன், காவலர்கள் முத்துப்பாண்டி, ஹரி பாலகிருஷ்ணன், ‌ ராஜசேகர், ஜான், ஜெயபால், கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளராக இருந்த பவுல்ராஜ் ஆகிய 9 பேர் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டது இதைத்தொடர்ந்து அவர்கள் 9 பேர் மீதும் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஆய்வாளர் பவுல்ராஜ் தற்போது டிஎஸ்பியாக பணி உயர்வு பெற்று நாகர்கோவில் குற்ற ஆவண காப்பக டி.எஸ்.பியாக உள்ளார்.

You'r reading கோவில்பட்டி காவல் நிலையத்தில் வாலிபர் சித்திரவதை: டி.எஸ்.பி உள்பட 9 பேர் மீது வழக்கு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - திருவள்ளூர் அருகே இரண்டு மாதத்தில் சாலை சேதம்: காண்டிராக்டருக்கு 10 சதவீதம் அபராதம் ஆட்சியர் அதிரடி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்