அபூர்வ பறவைகளை விஷம் வைத்து கொன்றவர் கைது

ஆரோவில் பகுதியில் வெளிநாட்டுப் பறவைகளை விஷம் வைத்து கொன்றவரை வனத்துறையினர் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த ஆரோவில் பகுதியில் சில நாட்களுக்கு முன் முன்னர் ஆலமரம் ஒன்றில் இருந்த அரியவகை வெளிநாட்டு பறவைகள் 100 க்கும் மேற்பட்டவை இறந்து கிடந்தன. இதுகுறித்து தகவலறிந்த வனத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை செய்ததில் பறவைகள் விஷம் வைத்து கொல்லப்பட்ட இருப்பது தெரிய வந்திருக்கிறது.

இதைத்தொடர்ந்து அவர்கள் மேற்கொண்ட விசாரணையில் புதுச்சேரியை சேர்ந்த சஞ்சீவி என்ற ரவி (31) மற்றும் அவரது சகோதரர் பிரபு மற்றும் கோபி ஆகிய மூவரும் இறைச்சிக்காக மரத்தில் ஏறி விஷம் வைத்து கொன்றது தெரியவந்தது. இதையடுத்து விழுப்புரம் மாவட்ட வனத்துறையினர் புதுச்சேரி சென்று அவர்களை கைது செய்தனர். இதில் பிரபு மற்றும் கோபி ஆகிய இருவர் தப்பி ஓடி விட்டனர்.

சஞ்சீவியை கைது செய்து வானூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இவர்கள் மூவரும் ஆரோவில் மற்றும் வானூர் காட்டுப் பகுதியில் உள்ள பறவைகள் விலங்குகள் வேட்டையடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். வேட்டையாடிய விலங்குகளை அருகில் உள்ள கிராமங்களுக்கு சென்று விற்பனை செய்து விடுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

You'r reading அபூர்வ பறவைகளை விஷம் வைத்து கொன்றவர் கைது Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - திருப்பதி கோவிலில் ஏகாதசி நாட்களில் காணிக்கை ரூ 29.06 கோடி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்