6 மாணவிகளை பலாத்காரம் செய்த ஆசிரியர்.. 49 ஆண்டு சிறை தண்டனை.. அதிரடி தீர்ப்பு

ஆறு மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியருக்கு, நீதிமன்றம் 45 ஆயிரம் அபராதமும் 49 ஆண்டு சிறை தண்டனையும் விதித்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கந்தர்வகோட்டையை சார்ந்தவர் அன்பரசன். இவர் அந்த ஊரில் உள்ள தொடக்க பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். அதே பள்ளியில் ஞானசேகர் என்பவரும் தலைமை ஆசிரியராக வேலை செய்து வருகிறார். கடந்த 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21 ஆம் தேதி பள்ளியில் படிக்கும் சில பெண்களிடம் அதாவது ஆறு மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இது பற்றி தலைமை ஆசிரியரான ஞானசேகரிடம் பெற்றோர்கள் ஒன்று திரண்டு புகார் அளித்துள்ளனர். ஆனால் புகார் அளித்தவர் மேல் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் பெற்றோர்கள் அந்த ஊரில் உள்ள மகளிர் காவல் நிலையத்தில் அன்பரசன் மேல் புகார் அளித்துள்ளனர். இருவரும் போக்சோ சட்டத்தில் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கு கடந்த இரண்டு வருடமாய் புதுக்கோட்டையில் உள்ள மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நேற்று 6 மாணவிகளை பலாத்காரம் செய்த அன்பரசுக்கு 49 வருடம் சிறை தண்டனையும், 45 ஆயிரம் அபராதமும் இக்குற்றத்தை அறிந்தும் உரிய நடவடிக்கை எடுக்காததால் ஞானசேகருக்கு 5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.அது மட்டும் இல்லாமல் பாதிக்கப்பட்ட பெண்களில்ன் குடும்பத்துக்கு தலா 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் தமிழக அரசு வழக்கும் என்றும் தீர்வில் தெரிவித்துள்ளனர்.

You'r reading 6 மாணவிகளை பலாத்காரம் செய்த ஆசிரியர்.. 49 ஆண்டு சிறை தண்டனை.. அதிரடி தீர்ப்பு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - முகக் கவசம் இல்லையா 50 புஷ் அப் எடுக்கணும் இந்தோனேஷிய போலீசார் அதிரடி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்