ரூ.100 கோடி மோசடி வழக்கு: ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் மூளையாக இருந்தது அம்பலம்!

பிரதமர், ஆளுநர் பெயர்களை பயன்படுத்தி ரூ.100 கோடி மோசடி செய்த விவகாரத்தில் பிரதமர் அலுவலகத்தில் வேலைப்பார்த்து ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் மூளையாக செயல்பட்டது தெரியவந்தது. கர்நாடகாவைச் சேர்ந்த கும்பல் ஒன்று எம்.பி சீட், மத்திய அரசு பணி வாங்கித்தருவதாக கூறி பல மோசடி செய்துள்ளது.

இந்த வழக்கை விசாரித்த சிபிசிஐடி போலீருக்கு திடுக்கிடும் தகவல் தெரியவந்துள்ளது. பிரதமர், ஆளுநர் அலுவலகம் பெயரில் போலி மெயில் ஐடி உருவாக்கி பணி நியமன ஆணை அனுப்பியது தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக மைசூரைச் சேர்ந்த 3 பேரை கைது செய்த சிபிசிஐடி போலீசார் அவர்களிடமிருந்த ஆவணங்களை பறிமுதல் செய்தது.

இதுகுறித்து விசாரணை செய்ததில் பிரதமர் அலுவலகத்தில்வேலைப்பார்த்து ஓய்வு பெற்ற 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மூளையாக செயல்பட்டது தெரியவந்தது. மேலும், வழக்கில் வெறு அதிகாரிகள் தொடர்வு இருக்கிறதா என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

You'r reading ரூ.100 கோடி மோசடி வழக்கு: ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் மூளையாக இருந்தது அம்பலம்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - காது கேட்காது: கண்ணும் தெரியாது: தத்தெடுத்த நாயை கவனிக்க ரோபோ உருவாக்கிய லக்னோ இளைஞர்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்