உ.பியில் பயங்கரம்: பள்ளி வாகனம் மீது ரயில் மோதி 13 மாணவர்கள் பலி

உத்தர பிரதேசம் மாநிலத்தில் ஆளில்லா லெவல் கிராசிங்கை கடக்க முயன்றபோது பள்ளி வாகனம் மீது ரயில் மோதியதில் 13 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

உத்தர பிரதேச மாநிலம் குஷிநகர் மாவட்டத்தில் இன்று காலை மாணவர்களை ஏற்றிக் கொண்டு பள்ளி வாகனம் ஒன்று பள்ளியை நோக்கி சென்றுக் கொண்டிருந்தது. அப்போது, விஷ்ணுபுரா காவல் சரகத்திற்கு உப்பட்ட துதி என்ற பகுதியில் உள்ள ஆளில்லா லெவல் கிராசிங்கை கடக்க முயன்றபோது அந்த வழிதடத்தில் வேகமாக வந்த ரயில் ஒன்று பள்ளி வாகனம் மீது மோதியது.

இந்த கோர விபத்தில் பள்ளி வாகனம் தூக்கி வீசப்பட்டு சுக்குநூறாக நொறுங்கியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 13 மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் பல மாணவர்கள் பலத்த காயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். உயிரிழந்த மாணவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், படுகாயங்களுடன் மீட்ட மாணவர்களை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன. இந்த பயங்கர சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நிவாரணம்:
பள்ளி வாகனம் மீது ரயில் மோதி ஏற்பட்ட விபத்தில் சிக்கி உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading உ.பியில் பயங்கரம்: பள்ளி வாகனம் மீது ரயில் மோதி 13 மாணவர்கள் பலி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஜெ. உயிரியல் மாதிரி: அறிக்கை அளிக்க அப்பல்லோவுக்கு அவகாசம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்