ஆர்.கே. நகர் தொகுதியில் திடீர் சோதனை: பிசியோதெரபி கிளினிக்கில் இருந்து ரூ.13 லட்சம் பறிமுதல்

சென்னை: ஆர்.கே.நகர் தொகுதியில், தேர்தல் பார்வையாளர் நடத்திய திடீர் சோதனையில் பிசியோதெரபி கிளினிக் ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.13 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நெருங்கி உள்ள நிலையில், கட்சிகள் சார்பில் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், தொகுதியில் பணம் பட்டுவாடா செய்வதற்கான அறிகுறிகள் இருப்பதாக தேர்தல் ஆணையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. சில இடங்களில் பணம் பட்டுவாடா செய்யப்பட்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது.

பணப் பட்டுவாடாவை தடுக்க தேர்தல் ஆணையம் பல்வேறு வழிகளில் முயற்சி மேற்கொண்டு வருகிறது. தங்களுக்கு கிடைக்கும் தகவல் மற்றும் புகார்களின் அடிப்படையில் சோதனையும் நடத்தி வருகிறது. அவ்வகையில், தேர்தல் பார்வையாளர் மற்றும் காவல் துறையினர் இன்று கொருக்குப்பேட்டையில் உள்ள ஒரு பிசியோதெரபி கிளினிக்கில் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது, கிளினிக்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.13 லட்சம் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கிளினிக்கில் அந்த பணம் எப்படி வந்தது என்பது குறித்து தேர்தல் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

You'r reading ஆர்.கே. நகர் தொகுதியில் திடீர் சோதனை: பிசியோதெரபி கிளினிக்கில் இருந்து ரூ.13 லட்சம் பறிமுதல் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மருத்துவமனை அனுமதிக்க மறுத்ததால் கால்வாயில் குழந்தையை பெற்றெடுத்த பெண்-ஒடிசாவில் பரபரப்பு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்