இங்கிலாந்து தூதரக பெண் அதிகாரியை பலாத்காரம் செய்து கொலை: உபர் கார் ஓட்டுனர் கைது

பெய்ரூட்: லெபனான் நாட்டில், இங்லாந்து தூதரகத்தில் பணியாற்றி வந்த பெண் அதிகாரிகை பலாத்காரம் செய்து கொலை செய்த கார் ஓட்டுனரை போலீசார் கைது செய்துள்ளனர்.

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில், இங்கிலாந்து நாட்டின் தூதரகம் அமைந்துள்ளது. இங்கு ரிபேகா டைகி(30) என்ற பெண் அதிகாரியாக இருந்தார். இவர் திடீரென காணாமல் போனார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார், புகார் பதிவு செய்ததை அடுத்து பல இடங்களில் தேடி வந்தனர்.

இந்நிலையில், அவர் பெய்ரூட்டில் தேசிய நெடுஞ்சாலையின் அருகே பிணமாக கிடந்தார். இதை தொடர்ந்து, அவரது உடலை மீட்ட போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போத, முதற்கட்ட விசாரணையில் அதிகாரி ரிபேகா பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இந்த கொலை தொடர்பாக, உபர் கார் டிரைவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். அப்போது, ரிபேகா கடந்த வெள்ளிக்கிழமை இரவு பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்டு விட்டு வீடு திரும்புவதற்காக உபர் செயலி மூலம் கார் ஒன்றை புக் செய்துள்ளார். சம்பந்தப்பட்ட இடத்திற்கு வந்த கார், ரிபேகாவை ஏற்றிக் கொண்டுள்ளது.

சில தூரங்கள் கார் சென்ற நிலையில், கார் ஓட்டுனர் ரிபேகாவிடம் தவறாக நடந்துக் கொள்ள முயற்சித்துள்ளார். அதனை அடுத்து, ரிபேகாவை கழுத்தை நெறித்த ஓட்டுனர், அவரிடம் இருந்த பணம், நகைகளை பறித்துக் கொண்டு காரில் இருந்து தள்ளிவிட்டுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த ரிபேகா மரணமடைந்துள்ளார் என தெரியவந்துள்ளது. ரிபேகாவை கொலை செய்ததை கார் ஓட்டுனர் ஒப்புக் கொண்டுள்ளார்.

பெண் அதிகாரியை பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் அந்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

You'r reading இங்கிலாந்து தூதரக பெண் அதிகாரியை பலாத்காரம் செய்து கொலை: உபர் கார் ஓட்டுனர் கைது Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - குஜராத் வெற்றிக்கு மோடி அலையோ அலையென்று அலைந்தார்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்