விடைத்தாள் முறைகேடு...30 பேருக்கு தொடர்பா...?

அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் மோசடியில் மேலும் 30 பேருக்கு தொடர்பு இருப்பது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. 
அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் திருத்தும் பணியில் மறுகூட்டல் முறையில் முறைகேட்டில் ஈடுபட்ட உதவி பேராசிரியர்கள் விஜயகுமார் மற்றும் சிவகுமாரிடம் இரண்டாவது நாளாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
500 கேள்விகள் மற்றும் 200 துணைக் கேள்விகள் என  மொத்தம் 700 என  கேள்விகள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அதன் அடிப்படையில் இரண்டாம் நாள் விசாரணையில் நடைபெற்று வருவதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்துள்ளனர்.
 
உதவிப் பேராசிரியர் விஜயகுமார் மற்றும் சிவகுமார் நடத்தப்பட்ட விசாரணையில் மறுகூட்டல் முறையில் மோசடிக்கு உதவியாக இருந்த அண்ணா பல்கலைக்கழக ஊழியர்கள் பேராசிரியர்கள், முன்னாள் பேராசிரியர்கள் என  30 பேர் பெயர்களை விசாரணையில் தெரிவித்துள்ளாதாக லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் தெரிவித்துள்ளனர்.

You'r reading விடைத்தாள் முறைகேடு...30 பேருக்கு தொடர்பா...? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - திமுக சார்பில் கேரளாவுக்கு நிவாரண உதவி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்