உடற்பயிற்சி கூடத்தில் பயங்கர தீ விபத்து: 29 பேர் பலி

ஜெசென்: தென் கொரியாவில் உள்ள உடற்பயிற்சி மையம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 29 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும, பலர் காயமடைந்துள்ளனர்.

தென் கொரியாவின் தென் பகுதியில் ஜெசென் என்ற நகரம் அமைந்துள்ளது. இங்குள்ள, எட்டு அடுக்கு மாடிகள் கொண்ட கட்டிடத்தில் உடற்பயிற்சி மையம், உணவகம் மற்றும் நீராவி குளியல் மையம் அமைந்துள்ளது. இந்த கட்டிடத்தின் தரைத்தளத்தில் திடீரென தீ பற்றத் தொடங்கியது. இதன்பிறகு, மளமளவென பரவிய தீ கட்டிடம் முழுவதும் பரவி எரிந்தது. இதனால், அப்பகுதி முழுவதும் புகைமூட்டம் ஏற்பட்டது.

இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்த சுமார் 60 தீயணைப்பு வீரர்கள், கட்டிடத்திற்குள் சிக்கி இருந்தவர்களை மீட்டனர். இதில், 29 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், தீ காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

கட்டிடத்திற்குள் மேலும் சிலர் சிக்கி இருப்பதால் உயிரிழப்பு அதிகிரிக்கும் எனவும் கூறப்படுகிறது. அதிகளவிலான புகைமூட்டம் இருப்பதால் மீட்பு பணியில் இடையூறு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

You'r reading உடற்பயிற்சி கூடத்தில் பயங்கர தீ விபத்து: 29 பேர் பலி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என தீர்ப்பு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்